10 மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்... வானிலை மையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக பரவலாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், பெரம்பலுார், கடலுார், புதுச்சேரி, கரூர், திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Moderate rain likely In 10 districts, Meteorological Center Report

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்துாரில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம், 9 ம் தேதிக்கு பிறகு பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கான, அறிகுறி இன்னும் தென்படவில்லை.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இடுக்கியில் இயல்பை காட்டிலும் 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கிய போது, வெளுத்து வாங்கிய மழைப் பொழிவு, படிபடியாக குறைந்து, தற்போது பற்றாக்குறையாக மாறியுள்ளது. வாயு புயல் உருவானதால் தென்மேற்கு பருவமழை பெய்வதில் பாதிப்பை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+