முதல் சக்ஸஸ்.. கேலோ விளையாட்டு போட்டியை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.. சென்னையில் உற்சாக வரவேற்பு
சென்னை: தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகை தந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டியின் துவக்க விழா நடைபெறுகிறது. இன்று தொடங்கி 31ம் தேதி வரை இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

உதயநிதி அழைப்பு: இந்த விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க வருமாறு, நேரிலேயே டெல்லி சென்று பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு கடிதம் வழங்கியிருந்தார்..
இதையடுத்து, இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்தடைந்தார். பிரதமர் மோடியை தமிழக அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். தமிழக பாரம்பரியத்துடன் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
விளையாட்டி போட்டியை துவக்கி வைக்கவும், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தம் சேகரிப்பதற்காக ராமேசுவரமும், தனுஷ்கோடியில் புனித நீராடவும் என பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி அவரின் பயணத் திட்டம் விவரம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி: இன்று 19ம் தேதி மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். மாலை 5.15 மணிக்கு ஹெலிகாப்டரில் மெரினா கடற்கரை அருகே உள்ள அடையாறு ஐஎன்எஸ் படைதளம் சென்ற பிரதமர், அங்கிருந்து கேலோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்றார்.
அப்போது வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக மலர்களை தூவி வரவேற்றனர். இதேபோல் தமிழக பாரம்பரியத்தின்படியும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஆளுநர் மாளிகை: கேலோ இந்தியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு, இரவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி ஓய்வெடுக்கிறார். மறுநாள், அதாவது நாளை ஜனவரி 20ம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் செல்லும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11 மணி அளவில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்கிறார். காலை 11 மணி முதல் மதியம் 12.40 மணி வரை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்படும் பிரதமர் மோடி, மதியம் 2.10 மணிக்கு ராமநாதசாமி கோயிலை அடைகிறார். மதியம் 2.45 முதல் 3.30 மணி வரை ராமநாதசாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
ரேடியோ நிலையங்கள்: இதனிடையே, கேலோ இந்தியா இளையோர் போட்டிகளை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ஒளிபரப்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ரூ.250 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சில பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
டிடி தமிழ் என புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை தொலைக்காட்சியை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி, 8 மாநிலங்களில் 12 பண்பலை ரேடியோ நிலையங்களையும் திறந்து வைக்கிறார். மேலும் 26 புதிய பண்பலை ரேடியோ திட்டங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் வருகையையொட்டி, சென்னை மற்றும் திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள உயரமான கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு: பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், சென்னை மாநகரில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அதேபோல, மோடி வருகையை முன்னிட்டு, சென்னையின் முக்கிய சாலைகளிலும் இன்றைய தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு பிரதமர் மோடி, இரவு 7.45 மணி அளவில் சென்னை கிண்டில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார்.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications