தாம்பரம் போல் உருவெடுக்கும் பரங்கிமலை ஸ்டேஷன்.. 13 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் மோடி
சென்னை: 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம், போளூர், திருவண்ணாமலை, விருதாச்சலம், சாமல்பட்டி, குழித்துறை, சூலூர்பேட்டை மற்றும் கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் உள்பட 13 ரயில் நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்தியா முழுவதும் 'அம்ரித் பாரத்' ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட 103 நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.

'அம்ரித் பாரத்' திட்டத்தில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 19 ரயில் நிலையங்களும், குஜராத்தில் 18 ரயில் நிலையங்களும், மகாராஷ்டிராவில் 15 ரயில் நிலையங்களும், தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களும், ராஜஸ்தானில் 8 ரயில் நிலையங்களும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 ரயில் நிலையங்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இரண்டு ரயில் நிலையங்கள் பீகாரிலும், மூன்று ஜார்க்கண்டிலும், ஐந்து கர்நாடகாவிலும், இரண்டு கேரளாவிலும், ஆறு மத்தியப் பிரதேசத்திலும், மூன்று தெலுங்கானா மாநிலத்திலும், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், அசாம், புதுச்சேரி, ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா ஒரு நிலையமும் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட 90 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஆரம்பம் ஆனது. சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை, கிண்டி, பரங்கிமலை, பூங்கா, மாம்பலம், கூடுவாஞ்சேரி, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் 60 சதவீதம் முடிந்துவிட்டது.
இப்போது மறுசீரமைக்கப்படும் ரயில் நிலையத்தில் கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பரங்கிமலை முக்கியமானது. கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில் நிலையம் தான் வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தையும், மெட்ரோ ரயிலையும் இணைக்கும் ரயில் நிலையம் ஆகும். அதாவது எழும்பூர், சென்ட்ரல் தாம்பரத்திற்கு அடுத்தபடியாக பரங்கிமலை முக்கியமான ரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது.
பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, முன்பதிவு அலுவலகம், கூடுதல் பயணிகள் இருக்கை, கண்காணிப்பு கேமரா, வாகன நிறுத்த வசதி, டிஜிட்டல் தகவல் பலகை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்துள்ள பரங்கிமலை, சூலூர்பேட்டை உள்பட 13 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்
தெற்கு ரயில்வேயில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், போளூர், திருவண்ணாமலை, விருதாச்சலம், சாமல்பட்டி, குழித்துறை, சூலூர்பேட்டை மற்றும் கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் உள்பட 13 ரயில் நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். காணொலி காட்சி வாயிலாக காலையில் நிகழ்ச்சி நடந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications