Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் கனவுத் திட்டம் ஜல் ஜீவன் மிஷன்.. இனி கிராமங்களில் இதை சரி செய்தால்தான் மத்திய அரசின் நிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம், முறைகேடுகளை முழுவதுமாக களைய வேண்டும் என்றும், சிறிய அளவில் கூட குறைகளோ, புகார்களோ இருக்குமேயானால், ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி, அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார்.. இது தொடர்பாக திமுக அரசுக்கு, தமிழக பாஜக முக்கிய விஷயம் ஒன்றை வலியுறுத்தியிருக்கிறது.

கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் இல்லந்தோறும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

Jal Jeevan Mission Program Villages Central Government

தண்ணீருக்கான தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்த திட்டத்தில், கிராமப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும், தனி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது..

மத்திய அரசு சபாஷ் திட்டம்

நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்தல், மறுபயன்பாடு போன்றவற்றை ஆய்வு செய்து குடிநீர் நிலைத்தன்மை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது..

ஜீவன் திட்டம் இந்தியா முழுக்க செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், வட மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.. ஏனென்றால், அந்த மாநிலங்களில்தான், குறைவான தண்ணீர் பயன்பாடு, குடிநீர் வசதி உள்ளது...

நம்முடைய தமிழகத்திலும், கடந்த 2022ம் ஆண்டு, 1.25 கோடி வீடுகளுக்கு மேல், குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.. அதன்படி, குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்ட பகுதிகளிலெல்லாம், குடிநீர் வினியோகமும் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு, இதற்காகவே தமிழகத்திற்கு மத்திய அரசு விருதினையும் அப்போது வழங்கியிருந்தது நினைவிருக்கலாம்.

சக்ஸஸ் செய்த தமிழ்நாடு

கடந்த வருடம்கூட, வடகிழக்கு பருவ மழையால், பல இடங்களில் ஜல்ஜீவன் மிஷன் திட்ட பணிகளில் பாதிப்புகள் ஏற்பட்டபோதும், பிற மாநிலங்களை மிஞ்சும்வகையில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தமிழகத்தில் வேகம் எடுத்திருந்தது..

தற்போது 1 கோடியே 25 லட்சத்து 26 ஆயிரத்து 665 வீடுகளுக்கு குடிநீருக்கான குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூலை மாத நிலவரப்படி, 1 கோடியே 11 லட்சத்து 61 ஆயிரத்து 65 வீடுகளுக்கு குடிநீருக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.. இது 89.10 சதவீதமாகும்.. இதற்காக மாதந்தோறும் தலா, 30 ரூபாய் குடிநீர் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது புதுச்சேரி, தெலுங்கானா, குஜராத், பஞ்சாப் உள்பட 11 மாநிலங்கள் ஜல் ஜீவன் திட்டத்தில் 100 சதவீத இலக்கு எட்டப்பட்டுவிட்டன..

மோடியின் கனவு திட்டம்

இந்நிலையில், ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால் நிதி நிறுத்தப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்..

ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில் முறைகேடு, தரம் குறைவு, தாமதம் போன்ற புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம், முறைகேடுகளை முழுவதுமாக களைய வேண்டும் என்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

கிராமங்களுக்கான குடிநீர் வசதி

குறிப்பாக, சிறிய அளவில் கூட குறைகளோ, புகார்களோ இருக்குமேயானால், ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி, அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பினை, தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தமிழக பாஜக தற்போது வலியுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ANS பிரசாத் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், "மத்திய அரசின் நல திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற நிதியை பெற்றுக் கொண்டு, திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாமல் நிர்வாக சீர்கேடுகளுக்கு இலக்கணமாக திமுக அரசு விளங்குகிறது.

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டம்

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தத் திட்டத்தில், தாமதப்படுத்தி பணிகள் செய்யப்பட்டால், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும்படி மத்திய பாஜக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு போதிய கவனம் செலுத்தாவிட்டால் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி நிறுத்தப்பட்டு தமிழக மக்கள் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகும்.

யாரையும் கன்ட்ரோல் செய்யவில்லை

எனவே, குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு குடிநீர் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசு யாரையும் கன்ட்ரோல் செய்து வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. தமிழக முதல்வர் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல், தொடர்ந்து மத்திய அரசை குறை சொல்வதும் பிரதமர் மோடியை விமர்சித்து அரசியல் செய்வதும் தான் முதல்வர் பணி என்ற குறிக்கோளில் செயல்படுவது தமிழகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும்" என்று அதில் வலியுறுத்தியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+