பாஜகவின் லுக் சவுத் பாலிசி; 2026 டார்கெட்? மீண்டும் மோடி பிரதமர்? திமுகவுக்கு நெருக்கடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் மோடி 3ஆவது முறையாகப் பிரதமரானால் அது திமுக அரசுக்கு நெருக்கடியாக அமையுமா? என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபால் சில உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார்.

இந்தியா டுடே உள்ளிட்ட சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி பாஜக 1 முதல் 3 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று சொல்லி இருக்கின்றன.

lok sabha election 2024 DMK mk stalin Modi BJP

இதனால் பாஜக தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்றும் என்று சொல்லப்படுகிறது. அதிமுக இடங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பாஜக பிடித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் பாதிப்புகள் 2026இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு சில மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இது பற்றி மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபால் ரகசியங்களைப் போட்டு உடைத்துள்ளார். அவர் ஒரு யூடியூப் தளத்திற்கு பாஜக வெற்றி குறித்தும் காங்கிரஸ் நிலை குறித்தும் பேசியுள்ளார்.

அதில் ராஜகோபால், "காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களில் மரணமடைந்துவிட்டது. அது நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. ராகுல்காந்தியின் தவறான நடவடிக்கைகளால் காங்கிரஸ் இன்று இந்தப் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ்தான் இதுவரை மூன்றுமுறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவி உள்ளது. நாளை அது உறுதியாகிவிடும். எதிர்க்கட்சிகளுக்குக் காங்கிரஸ்தான் உயிரூட்டக் கூடிய ஆக்சிஜன். அது இப்போது செயலிழந்துவிட்டது.

இந்தியாவில் பழமையான கட்சி காங்கிரஸ். அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் ஆகின்றன. இந்தநாட்டைக் காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது.

lok sabha election 2024 DMK mk stalin Modi BJP

ஆனால், 2014 தொடங்கி 2019 வரையான மக்களவைத் தேர்தல்களில் அது தோல்வியைத் தழுவி இருக்கிறது. நாளை வெளியாக உள்ள 2024 தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அமையப் போகிறது.

இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் சில இடங்களில் வென்றுள்ளது. பல இடங்களில் தோற்றும் உள்ளது. ஆகவே, அதன் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது.

அதேபோல் திமுக இந்த முறை சில இடங்களை இழக்கும். அந்த இடங்களை பாஜக பெறும். இதன்மூலம் பாஜகவுக்கு 2% வாக்குகள் தமிழ்நாட்டில் கிடைக்கப் போகின்றது. திமுகவின் வாக்கு சதவீதம் குறைய உள்ளது.

அடுத்து அதிமுகவின் நிலை பரிதாபமாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் நிலையும் அப்படித்தான்.

கடந்த 2 ஆண்டுகள் முன்பாக ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடத்தியது. அதில் லுக் சவுத் பாலிசி என்று ஒரு பார்வையை முன்வைத்தார்கள். அதில் தெலுங்கா தான் ஃபர்ஸ்ட். தமிழ்நாடு நெக்ஸ்ட் என்று டார்கெட் செய்துள்ளார்கள். இதை நட்டாவே என்னிடம் கூறியுள்ளார்.

ஆகவே, பாஜக தடாலடியாக எல்லாம் இறங்கவில்லை. அவர்கள் திட்டமிட்டு தென்மாநிலங்களைக் குறிவைத்துள்ளனர். இது திமுகவுக்குப் பெரிய நெருக்கடியாக அமையும். 2019இல் ராகுல் பிரதமராவார் என்றார் ஸ்டாலின். அது நடக்கவில்லை. 2024 யார் பிரதமர் என்பதை திமுக நிர்ணயிக்கும் என்றார். அதுவும் இப்போது பொய்த்துப் போகப் போகிறது. மீண்டும் மோடி வரப் போகிறார்.

அடுத்து 2026இல் பாஜக தமிழ்நாட்டில் 75 தொகுதிகளில் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் 40 தொகுதிகள் உறுதியாகக் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

lok sabha election 2024 DMK mk stalin Modi BJP

அடுத்து 6 மாதங்களில் மோடி தொடர்ச்சியாகத் தமிழகம் நோக்கி பயணம் செய்ய இருக்கிறார். இவை எல்லாம் பாஜகவின் திட்டத்தில் உள்ளன.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அது திமுக அரசுக்குப் பாதிப்பைத் தரும். நிதி கிடைக்காமல் தவிக்கும் தமிழ்நாடு அரசு. இதை எல்லாம் திமுக முன்கூட்டியே உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் உணர்ந்ததாகத் தெரியவில்லை" என்றவர் அதிமுக பற்றி சில கருத்துகளை முன்வைத்தார்.

"அதிமுக சில இடங்களில் வெற்றி பெற்றால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வருவார்கள். மோடியை ஆதரிப்பார்கள். அப்படி இல்லை என்றால் அது அந்தக் கட்சிக்கு சில நெருக்கடியை உண்டாக்கும். ஆகவே, அதை உணர்ந்து எடப்பாடி முடிவுகளை எடுப்பார்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+