Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகலாயர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைய நல்லவை நடந்தன தெரியுமா? பாஜகவிற்கு முரசொலி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறுகிய கண்ணோட்டத்தில் வரலாற்றை அணுகக் கூடாது என்று பேசும் பிரதமர் நரேந்திர மோடி, முதலில் அவரே அதை கடைபிடிக்க வேண்டும் எனவும், இஸ்லாமிய மன்னர்களின் மதநல்லிணக்கக் கருத்துக்களை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சீர்திருத்த முயற்சிகளை மறைத்து அவர்கள் கொடுமை மட்டுமே செய்தார்கள் என்று கட்டமைக்க நினைப்பதன் உள்நோக்கம் மதமோதலை ஏற்படுத்துவதுதான் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலி தெரிவித்துள்ளது.

'குறுகிய கண்ணோட்டத்தில் வரலாற்றை அணுகக் கூடாது' என்று சொல்லி இருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதே குறுகிய கண்ணோட்டத்தையே தனது உரையில் வெளிப்படுத்தி இருக்கிறார். சீக்கிய குருவான குருகோவிந்த சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், பேசிய பிரதமர் அவர்களது உரையில், அவர் எதைச் சொல்ல முன்வந்தாரோ, அதனையே அவர் எதிரொலித்தும் இருக்கிறார்.

"குருகோவிந்த சிங்கின் மகள்களை மதம் மாற வைக்க ஔரங்கசீப் முயற்சித்தார். அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள். அடிப்படைகளையும் பாரம்பர்யங்களையும் உணர்ந்து கொள்ளும் நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். நம்பிக்கைகள் வாயிலாக நமது முன்னோர்கள் இந்தியக் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தார்கள்." என்றெல்லாம் பேசி இருக்கிறார் பிரதமர் அவர்கள்.

மோடி பேச்சின் உள்ளடக்கம்

மோடி பேச்சின் உள்ளடக்கம்

மொகலாயர்கள் ஆட்சி காலம் மோசமாக இருந்தது என்பதும், பிரிட்டிஷ் ஆட்சி காலம் இந்தியாவின் பாரம்பர்யப் பெருமைகளைச் சிதைத்துவிட்டது என்பதுதான் பிரதமர் உரை யின் உள்ளடக்கமாக இருக்கிறது. அவர் வலியுறுத்தும் பரந்த மனப்பான்மை கொண்டதாக அவர் பேச்சு இல்லை. அதே குறுகிய எண்ணம் கொண்டதாகவே இருக்கிறது.

வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா

வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா

"தொன்மை மற்றும் இடைக்காலங்களில் நிலவிய இந்திய வரலாறு குறித்த அறிவியலுக்குப் புறம்பான பார்வை, வகுப்பு உணர்வுகள் பரவுவதற்கான முக்கியக் கருவியாகவும், அத்தகைய சித்தாந்தத்தின் முக்கிய அம்சமாகவும். அதன் விளைவாகவும் திகழ்ந்தது. உண்மையில் வரலாற்றை வகுப்புவாத ரீதியில் விளக்குவது இந்தியாவில் வகுப்புவாதத்தின் முக்கியமான சித்தாந்தமாக உள்ளது" என்று இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா எழுதி இருக்கிறார்.

 வகுப்புவாதச் சித்தாந்தம்

வகுப்புவாதச் சித்தாந்தம்

'வகுப்புவாதச் சித்தாந்தத்தின் அடிப்படையில் வகுப்பறை வரலாறு இருந்தால், கல்வியைப் பரப்புவது என்பது வகுப்புவாதத்தைப் பரப்புவதாக ஆகிவிடும்" என்று எச்சரித்தார் பிபின் சந்திரா. இசுலாமியர்களும், ஆங்கிலேயர்களும் அன்னிய ஆட்சியாளர்கள், அவர்கள் கொடுமையை மட்டுமே செய்தார்கள் என்று கட்டமைக்க நினைப்பதுதான் இன்றைய வகுப்புவாத கருத்தாக்கம் ஆகும்.

மதமோதலே நோக்கம்

மதமோதலே நோக்கம்

இதன் மூலமாக மதமோதல்களுக்கு வித்திடுவதே இதன் உள்நோக்கம் ஆகும். இசுலாமிய மன்னர்களின் மதநல்லிணக்கக் கருத்துக்களை மறைப்பதும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சில சீர்திருத்த முயற்சிகளை மறைப்பதும் இதன் உள்ளடக்கம் ஆகும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் சில சட்டங்கள் போடப்பட்டன. அவை எதற்காக வந்தன என்பதை அறிந்தால், முந்தைய பாரம்பரியம் என்ன செய்து கொண்டு இருந்தது என்பதை அறியலாம்.

பிரிட்டிஷ் அரசின் சீர்திருத்தம்

பிரிட்டிஷ் அரசின் சீர்திருத்தம்

1795-பெண் குழந்தைகளைக் கொல்லுதல் கொலைக்கும் சமமானது என அறிவிப்பு.

1811- அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டது.

1812- உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு வெல்லெஸ்லி கடிதம் அனுப்பினார். சமயக் கோட்பாடுகளை மனதில் கொண்டு செயல்படவும் என்று அவருக்கு நீதிமன்றம் பதில் அனுப்பியது. உடன்கட்டை ஏறுதலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

1817 அனைத்துச் சாதியினரும் ஓடு வேய்ந்த வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார் மன்றோ.

நாடார்களுக்கு சார்பான சட்டம்

நாடார்களுக்கு சார்பான சட்டம்

1817- திருவிதாங்கூர் பிரிட்டிஷ் ரெஜிமெண்ட் பேராளராக மன்றோ இருந்தபோது ஈழவர், நாடார் முதலிய சாதியினர் பொன் வெள்ளி அணியலாம் என்று உத்தரவிட்டார்.

1819- சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதலுக்கு முழுத்தடை.

1830 - சென்னை மாநிலத்தில் உடன்கட்டை எனப்படும் சதிக்கு தடை.

1832 - காமக்கினியாள் கோவிலில் நரபலிக்குத் தடை விதிக்கப்பட்டது. இக்கோவில் 1565 முதல் நரபலி கொடுக்கப்பட்டு வந்த கோவிலாகும்.

1833 - உடன்கட்டை ஏறுதலை தடை செய்ததை எதிர்த்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

அடிமை ஒழிப்புச்சட்டம்

அடிமை ஒழிப்புச்சட்டம்


1833- பட்டயச் சட்டத்தின்படி சாதி, சமய, நிற வேறுபாடுகளின் அடிப்படையில் இந்தியர் யாரும் வேலை வாய்ப்பினை இழந்துவிடக்கூடாது எனக் கூறியது. பிரிட்டிஷாருக்கும் இந்தியருக்கும் வேலைகள் பெறுவதில் வேற்றுமை கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

1833 - பிரிட்டிஷ் பேரரசில் அடிமை முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆறு வயதுக்கு உட்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொழிற் பயிற்சி தந்து விடுவிக்க வேண்டும்.

1835- இந்தியக் கல்வி. சட்டம் பற்றி ஆராய மெக்காலே அமர்த்தப்பட்டார். அனைவரும் படிக்க இது வழிவகை செய்தது.

1837 - இந்திய தண்டனைச் சட்டத்தை மெக்காலே எழுதினார். அனைவர்க்கும் சட்டம் பொதுவானது.

விதவை மறுமணச் சட்டம்

விதவை மறுமணச் சட்டம்

1837 - மதம் மாறிய இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கும் முன்னோர் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம் வந்தது. சிலர் எதிர்த்ததால் இதை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தனர்.

1841-கோவில் போன்ற சமய நிறுவனத் தொடர்பை கம்பெனி விலக்கிக் கொண்டது. கோவில்கள் மீண்டும் தர்மகர்த்தா முறைக்குப்போனது.

1856- விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது. விதவைகள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு பரம்பரைச் சொத்தில் உரிமை உண்டு என்றது இச்சட்டம்.

சாதி, இனவெறிக்கு எதிரான சட்டம்

சாதி, இனவெறிக்கு எதிரான சட்டம்

1858 - பிரிட்டிஷ் மகாராணியின் அறிக்கையில், இந்தியாவின் ஊழியர்கள் சாதி, இனப்பாகுபாடின்றி நடத்தப்படுவார்கள் என்றும் பாரபட்சம் காட்டப்படாது என்றும் அறிவித்தார். எந்த சட்டம் இயற்றினாலும் இந்தியாவின் பாரம்பர்ய உரிமைகள், பழக்க வழக்கங்கள், வழக்காறுகளுக்கு உரிய மரியாதை தருவோம் என்றும் சொல்லப்பட்டது.

 முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

1861- அடிமைகளை வைத்திருப்பது தண்டிக்கப்படும் சட்டம் ஆனது, 1891- திருமண வயது மசோதா அறிமுகம். சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது.

1892- ஆதிதிராவிடர் நிலம் மற்றும் சொத்து வாங்குவதை தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

1909 -இந்திய கவுன்சில் சட்டப்படி முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறைப்படி தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இனம். வகுப்பு அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டது. சென்னை சட்டமன் றத்தில் அனைத்து தரப்பினரும் நுழைந்தார்கள்.

பிரதமரே கடைபிடிக்கனும்

பிரதமரே கடைபிடிக்கனும்


இவை அனைத்தும் என்ன சொல்கிறது? பாரம்பர்யம் என்ற பெயரால் பெண்களும், ஏழைகளும், எளிய மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் எப்படி ஒடுக்கப்பட்டுக் கிடந்தார்கள் என்பதையும், அதில் இருந்து சட்டபூர்வமான விடுதலைக்கு வழி அமைக்கப்பட்டது எப்படி என்பதையும் அறியலாம். இவர்கள் சொல்லிக் கொள்ளும் 'கலாச்சாரப் பெருமைகள்' எத்தகைய சிறுமைத்தனங்களை புனிதப்படுத்தி வைத்திருந்தன என்பதை இதன் மூலமாக அறியலாம். "குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து வரலாற்றை அணுகக் கூடாது" என்று பிரதமர் சொல்வது உண்மை. முதலில் அவரே அதனைக் கடைப்பிடிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+