CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வுத் தாள்கள் மதிப்பீட்டு முறைகேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

இன்று காலை நடைபெற்ற பிரதமரின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' உரையில், கோடை காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளையும் 'மாம்பழங்கள்' மற்றும் அதன் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி விரிவாகப் பேசினார்.

Rahul Gandhi

மோடிக்கு கேள்வி

இதனைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "இன்று காலை பிரதமருக்கு மாம்பழங்களைப் பற்றி பேச நேரம் இருந்தது. ஆனால், மொபைல் போன்கள் மூலம் தேர்வுத் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டதால் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ள 18.5 லட்சம் மாணவர்களைப் பற்றிப் பேச அவருக்கு நேரமில்லை" என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

டெண்டரில் பிரச்சனை

மேலும், "பிரதமரின் இந்த மௌனம் வெறும் அலட்சியம் அல்ல. அது முறைகேட்டிற்குத் துணை போவதாகும்" என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி சிபிஎஸ்இ-யின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் டெண்டர் விதிகளில் தங்களுக்குச் சாதகமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

சிபிஎஸ்இ-யின் முதல் டெண்டரின்படி, விடைத்தாள்களைப் பாதுகாப்பாகப் பிரித்து, அதிநவீன ரோபோடிக் ஸ்கேனர்கள் மூலம் குறைந்தபட்சம் 300 DPI தரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று நிபந்தனை இருந்தது.

மொபைலில் ஸ்கேன்

ஆனால், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, ஆகஸ்ட் மாதம் மறுவெளியீடு செய்யப்பட்ட டெண்டரில் ரோபோடிக் ஸ்கேனர் விதி நீக்கப்பட்டு, சாதாரண ஸ்கேனர்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன் ஸ்கேனிங் தரம் 200 DPI ஆகக் குறைக்கப்பட்டது. எந்த அளவுக்கு குறைக்கப்பட்டது எனில், இந்த விதிமுறைத் தளர்வுகளின் விளைவாக, ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் மாணவர்களின் விடைத்தாள்களை மொபைல் போன்களைக் கொண்டு சாதாரண முறையில் ஸ்கேன் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

திட்டமிட்ட மோசடி

இதனால் ஆன்லைனில் திருத்தப்பட்ட விடைத்தாள்களில் பக்கங்கள் விடுபட்டது, மங்கலான பிரதிகள் மற்றும் ஸ்கேன் செய்யப்படாத பக்கங்கள் எனப் பல குளறுபடிகள் நடந்துள்ளன. இவை தற்செயலான தவறுகள் அல்ல, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்குப் பொருந்தும் வகையில் ஒப்பந்தம் எழுதப்பட்டதன் திட்டமிட்ட விளைவு, இது ஒரு மாபெரும் மோசடி என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சருக்கு கேள்வி

இவ்வளவு பெரிய குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் ஆதாரங்களுடன் வெளிவந்த பிறகும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்னும் தனது பதவியில் நீடிப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவனும் இந்தத் தவறான மதிப்பீட்டு முறையின் பலியாக மாறியுள்ளான் என்றும், மாணவர்களின் நியாயமான எதிர்காலத்திற்காகத் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+