Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உடனே செய்யுங்க".. ஹீராபென் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்.. கமலாலயத்தில் பாஜக அஞ்சலி, அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் தாயார் மரணத்துக்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தாயாரின் ஆன்மா ஈசன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம் என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இன்று சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.. இந்த தகவலை பிரதமர் நரேந்திரமோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

அதில் "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா... ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள். மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது" என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்...

 மதர் - உருக்கம்

மதர் - உருக்கம்

தாயார் மறைவையடுத்து, அகமதாபாத் விரைந்துள்ளார் பிரதமர் மோஇன்று காலை அகமதாபாத் விமான நிலையம் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தன்னுடைய தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்குச் செல்ல உள்ளார். இதைத்தொடர்ந்து பிரதமரின் தாயாரின் உடல் அகமதாபாத்தில் உள்ள செக்டர் 30 மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் தன்னுடைய தாயை பற்றி பல்வேறு சமயங்களில் உணர்ச்சிகரமாக பேசுவார்.. எந்த ஒரு பொது நிகழ்ச்சி என்றாலும்கூட, அதில் தன்னுடைய அம்மாவை பெருமைப்படுத்தி பேசாமல் இருக்க மாட்டார்..

 ஸ்டாலின் இரங்கல்

ஸ்டாலின் இரங்கல்

இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. பிரதமர் மோடியின் தாயார் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன் என்றும், தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

 உருக்கம் எடப்பாடி

உருக்கம் எடப்பாடி

அதேபோல, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.. நமது மாண்புமிகு பிரதமரின் தாயார் திருமதி ஹிராபா மோடி இன்று அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அஇஅதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அவரின் ஆன்மா ஈசன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 முருகன் ட்வீட்

முருகன் ட்வீட்

அதேபோல, தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், நூற்றாண்டுகள் வாழ்ந்து, பாரதத்திற்கு தலைசிறந்த தவப் புதல்வனாக நம் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை தாய்நாட்டிற்காக அர்ப்பணித்து, நம் பாரத பிரதமரின் அங்கத்தில் சுவாசமாக திகழ்ந்து...உலகம் போற்றும் உன்னத மாமனிதனை ஈன்றெடுத்த தாய் ஹீராபென் மோடி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மறைந்த அன்பு தெய்வத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். இந்த கடினமான சூழலில் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.

 தோளில் சுமந்து

தோளில் சுமந்து

பிரதமரின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இதனிடையே அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, தாயாரின் சடலத்தை சுமந்து சென்றார்.. முகம் முழுவதும் சோகமாய், தன் தாயின் சடலத்தை தோளில் வைத்து சுமந்து சென்றார் பிரதமர் மோடி.

 அண்ணாமலை

அண்ணாமலை

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் தாயாரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "நம் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி. ஹீராபென் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 உடனே செய்யுங்க

உடனே செய்யுங்க

இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்திலும், மற்றும் ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அன்னை ஹீராபென் அவர்களின் திரு உருவ படத்திற்கு கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அனைத்து மாவட்ட தலைவர்களும் உடனடியாக இதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டுகிறேன்" என்று அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+