ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்.. ஊழியர்களுக்கும் சாதகம்.. அரசுக்கும் சாதகம்.. ஸ்மார்ட்டான பிளான்!
சென்னை: பிரதமர் மோடி அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) அறிமுகப்படுத்தியது, மாநில மற்றும் மத்திய அரசுகளின் நிதி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அரசு ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய சாதனையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இந்த சீர்திருத்தம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசுகளுக்கும் பொருளாதார ரீதியான சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.
UPS ஆனது, ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் பணியின் கடைசி 12 மாத சேவையில் சராசரியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக வழங்குவதை உறுதி செய்கிறது. அதாவது ஊழியர் ஓய்வுபெறும் கடைசி சராசரியான வருடத்தில் பெற்ற வருமானத்தில் 50% ஐ ஓய்வூதியமாக பெறலாம். பொருளாதார பாதுகாப்பையும், முறையான ஓய்வூதிய உறுதியையும் இது வழங்குகிறது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயினால் நிறுவப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்தின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்யாமல் இந்த உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

அதாவது ஓய்வூதியங்களில் பங்களிப்பு மற்றும் நிதியளிக்கும் தன்மை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்.. ஊழியர்களும் அரசாங்கமும் ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்ற முறையை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. UPS ஆனது ஒரு நிலையான வருமான மாதிரியை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குகிறது. 50 சதவிகிதம் ஊதியத்தை நிலையாக வழங்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
UPS ஆனது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) முற்றிலும் மாறுபட்டது. இரண்டும் ஒன்றுதான் என்று சிலர் வாதங்களை வைக்கின்றனர். ஆனால் இரண்டிற்கும் இடையில் மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள், NDA அல்லாத தலைமையின் கீழ் OPS க்கு திரும்பி உள்ளது. இது நிதி ரீதியாக பொறுப்பற்றது என்று விமர்சிக்கப்பட்டது. முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டம் என்பது.. மாநில அரசுகளை பொருளாதார ரீதியாக கடுமையான சரிவை நோக்கி தள்ளி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கூட பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு செல்வது என்பது ஆபத்தான நடவடிக்கை என்று அறிவுறுத்தி உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் அரசுக்கு கடுமையான நிதி சுமையை ஏற்படுத்தும். ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அப்படி இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம், தேசிய ஓய்வூதிய அமைப்புடன் (NPS) ஒப்பிடும்போது மத்திய மாநில அரசுக்கு இதனால் நிதி இழப்பும் ஏற்படாது, ஊழியர்களுக்கும் நல்ல ஓய்வூதியம் கிடைக்கும்.
மோடி அரசாங்கத்தின் UPS ஆனது அரசு ஊழியர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ஒரு விவேகமான ஓய்வூதிய முறை ஆகும். அதே நேரத்தில் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் மொத்த நிதியையும் ஓய்வூதியத்திற்கு கொடுத்து நிதி பிரச்சனைக்கு ஆளாகாமல்.. நலத்திட்டங்களை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கும் விதமாக இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியத்தையும் இதன் மூலம் முறையாக கொடுக்கலாம்.. அதே சமயம் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக மேற்கொள்ளலாம்.
அரசாங்கத்தின் பங்களிப்பை அடிப்படை ஊதியத்தில் 18.5% ஆக அதிகரிப்பதன் மூலமும், ஊழியர்களின் பங்களிப்பை 10% ஆக வைத்து இருப்பதன் மூலமும், UPS உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்திற்கு வழி வகுக்கிறது. அதே சமயம் ஊழியர்களுக்கும் அதீத நிதி சுமையை ஏற்படுத்தாது. மத்திய, மாநில அரசுகளுக்கும் நிதி சுமையை ஏற்படுத்தாது.
மேலும், யுபிஎஸ் மத்திய அரசுக்கு மட்டுமின்றி மாநிலங்களுக்கும் பெரிய அளவில் பலன்களை வழங்குகிறது. பழைய ஓய்வூதியத்திற்கு செல்வதற்கு பதிலாக..நிலையான ஓய்வூதிய மாதிரியை பின்பற்ற மாநில அரசுகளை ஊக்குவிக்கிறது. இதன்மூலம் மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. யுபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள் தங்களுடைய நிதி நிலைத்தன்மையை பாதிக்காமல் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யலாம், பென்ஷனும் வழங்கலாம்.
பிரதமர் மோடி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி விவேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது, பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மனதில் வைத்து.. கூட்டுறவு கூட்டாட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் , பொருளாதார பாதுகாப்பு, எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அனைத்தையும் வழங்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட உள்ளது. இது ஓய்வூதிய சீர்திருத்தம் மட்டுமல்ல, இந்தியாவின் மாநிலங்களும் அதன் மக்களும் வளமான எதிர்காலத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு அசத்தலான பிளான்! மத்திய, மாநில அரசுகள்.. அதன் ஊழியர்கள்.. அரசு திட்டங்களை நம்பி இருக்கும் பொதுமக்களை ஒரு சேர திருப்திப்படுத்தும் வகையில் இந்த அசத்தலான திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாட்டின் நிதி ஆரோக்கியத்தை உறுதி செய்யும் அதே வேளையில் மில்லியன் கணக்கான அரசாங்க ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications