மோகன்லாலின் எம்புரான்: கொடூர வில்லனாக இந்துத்துவா கட்சி- தடை செய்ய வலியுறுத்தல்- 17 இடங்களில் கட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மோகன்லாலின் எம்புரான் திரைப்பட சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எம்புரான் திரைப்படத்தில் கொடூரமான வில்லனாக இந்துத்துவா கட்சியை சித்தரிப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன. இதனையடுத்து எம்புரான் தயாரிப்பு நிறுவனம் தாமாகவே முன்வந்து சர்ச்சைக்குரிய சில காடசிகளை நீக்கவும் முடிவு செய்துள்ளதாம்.

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான்- லூசிஃபர் பார்ட் 2. கேரளா அரசியலை மையமாகக் கொண்டதாக லூசிஃபர் முதல் பாகம் வெளியாகி இருந்தது. முதல் பாகத்தில் மேலோட்டமாக கேரளா அரசியலில் சர்வதேச மாஃபியா கும்பலின் தொடர்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

empuran mohanlal kerala

குஜராத் படுகொலைகளை நினைவூட்டும் காட்சிகள்

தற்போது எம்புரான் என்ற பெயரில் லூசிஃபர் பார்ட் 2 வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் தொடக்கமே யாருமே எதிர்பார்க்காத வகையில் வட இந்தியாவில் நடைபெறும் மிக கொடூரமான மதவன்முறையை சித்தரிக்கும் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்துத்துவா வன்முறை கும்பல் ஒன்று இஸ்லாமியர்களை வேட்டையாடி படுகொலை செய்கிறது.. அதுவும் கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்கிற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் அப்பட்டமாக 2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகள், பில்கிஸ் பானு பலாத்கார சம்பவம் உள்ளிட்டவைகளை நினைவூட்டுகின்றன.

கேரளாவிலும் கால் பதிக்கும் இந்துத்துவா கட்சி

அதேபோல கேரளா அரசியலுக்கே மிகப் பெரிய வில்லனாக நுழைகிறவர் பெயர் பஜ்ரங்கி. இவர் வேறு யாருமல்ல.. மேலே குறிப்பிட்ட இஸ்லாமியருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளில் ஈடுபட்டவர்தான். கேரளாவில் ஊழலில் திளைத்து டெல்லியின் பிடியில் சிக்கி இருக்கும் முதல்வர், தம்மை பாதுகாப்பதால் தமது அப்பா தொடங்கிய ஆளும் கட்சியையே உடைத்து பஜ்ரங்கியின் காவி கட்சியுடன் கூட்டணி வைக்கிறார். பஜ்ரங்கி என்ற பெயரை உச்சரிக்கும் காட்சிகள் அனைத்திலும் கொடூரத்தின் உச்சமாக காட்டப்படுகிறது.

மெயின் வில்லன் இந்துத்துவா கட்சி தலைவன்

இப்படியான மெயின் வில்லனான காவி இந்துத்துவா கட்சியின் தலைவன் பஜ்ரங்கியை, அவரால் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் இருந்து தப்பிய இஸ்லாமிய சிறுவன் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் லூசிஃபர் என்ற ஆபிரகாம் குரேஷியுடன் இணைந்து படுகொலை செய்வதுதான் படம். கேரளாவின் காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எம்புரான் திரைப்படத்தை தடை செய்ய கோரிக்கை

இந்த படம் காவி இந்துத்துவாவுக்கு எதிரானதாக இருப்பதால் ரிலீஸ் ஆன நாள் முதலே சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்துத்துவா ஆதரவாளர்கள் எம்புரான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். கேரளா அரசியலிலும் எம்புரான் திரைப்பட காட்சிகள் பேசு பொருளாகி இருக்கின்றன.

17 இடங்களில் கட்

இதனால் எம்புரான் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இதனையடுத்து இஸ்லாமியருக்கு எதிரான வன்முறை காட்சிகளின் தீவிரத்தை குறைப்பது எனவும் படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துவிட்டதாம். இதனால் எம்புரான் திரைப்படத்தில் தயாரிப்பு நிறுவனம் தாமாகவே முன்வந்து 17 இடங்களில் கட் செய்திருக்கிறதாம். மொத்தம் 15 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டிருக்கின்றனவாம். இந்த கட் செய்யப்பட்ட திரைப்படம் ஏப்ரல் 2-ந் தேதி முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+