இன்னைக்கு ராத்திரி நேரம் ரொம்ப முக்கியமானது.. யாருக்கு தெரியுமா?
நாளை தேர்தலை முன்னிட்டு இன்று பணப்பட்டுவாடா அதிகமாக நடக்க உள்ளதாக தெரிகிறது.
சென்னை: இன்னைக்கு ராத்திரி ரொம்ப முக்கியமான நேரம்.. யாருக்கு தெரியுமா? எல்லாம் நம்ம கட்சிக்காரங்களுக்குதான்!
பணப்பட்டுவாடான்னு வந்துவிட்டால் தேர்தல் விதி, பறக்கும்படை, அதிகாரிகள் என எதற்குமே அசர மாட்டார்கள் நம்ம தலைகள்!
நீ ஒரு பக்கம் சோதனை போடு.. நான் ஒரு பக்கம் பணத்தை அள்ளி விடறேன் என்று ஒவ்வொரு கட்சியிலும் டீம் இறங்கி விட்டது!

ஊருக்கு வெளியே
பரமக்குடி பகுதியில் பணப்பட்டுவாடா எப்படி நடக்குது தெரியுமா? ஊருக்குள்ளே இப்படி சமாச்சாரமே நடக்கிறது இல்லை. பரமக்குடி அருகே அரியனேந்தல் , வேந்தோணி பகுதி, அபிராமம் அருகே பில்லந்தை - மண்டல மாணிக்கம் செல்லும் பகுதிகளில் வாக்காளர்களை வரவழைத்து விடுகிறார்களாம். அங்கேதான் கலர் கலராக பட்டுவாடா செய்யப்படுகிறது.

பிரதான கட்சிகள்
இப்படி பரமக்குடி என்று குறிப்பாக இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரவலான நிலை இதுதான். அதுவும் பாரபட்சம் பார்க்காமல் பிரதான கட்சிகளுமே இதில் அடக்கம்தான். அதிமுக, திமுக, அமமுக என்று யாரையுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் கட்சிகளை இந்த லிஸ்ட்டில் கொஞ்சமும் நாம் சேர்க்க முடியாது... சேர்க்கவும் கூடாது!

எவ்ளோ தந்தாங்க?
ஆனால் அமமுக 300 ரூபாய், திமுக 500 ரூபாயாம்.. அதுவே அதிமுக 1000 ரூபாயாம்! வீட்டுக்குவீடு பெரும்பாலான இடங்களில் மக்கள் இப்படித்தான் வாங்கி வருகிறார்கள். "இவ்வளவு தந்துவிட்டு போனாங்க.. அங்க அவ்வளவு தந்துவிட்டு போனாங்க.. உங்களுக்கு எவ்ளோ தந்தாங்க.." என்று வழக்கமான டயலாக்குகள் ஆங்காங்கே கேட்க முடிகிறது.

ஓட்டுக்கு பணம்
இன்னைக்கு ராத்திரிதான் கடைசி நாள் என்பதால், தமிழகம் முழுக்க பணம் பட்டுவாடா நடக்க போகிறது. தேர்தல் பறக்கும் படையினர் இதனை எப்படி தடுத்து நிறுத்த போகிறார்களோ, எந்த அளவுக்கு கட்டுப்படுத்த போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஓட்டுக்கு பணம் தருவதையும், அதை வாங்கும் நம் மக்களையும் சத்தியமா திருத்தவே முடியாது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications