Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ 525 கோடி மோசடி வழக்கு: பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவிடம் 8 மணி நேரமாக துருவி துருவி விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிதி நிறுவனத்தில் ரூ 525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி இயக்கத் தலைவர் தேவநாதன் யாதவ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் சென்னை குற்றப் பொருளாதார பிரிவு போலீஸார் 8 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேவநாதன் தலைவராக உள்ள மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டிக் கொடுப்பதாக ஆசை காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் வட்டி பணமான ரூ 50 கோடியை முதலீட்டாளர்களுக்கு தரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

sivagangai devanathan tamil nadu

சரி வட்டிதான் போச்சு, முதலீடு செய்த தொகையையாவது கொடுங்கள் என கேட்டால், அதையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இது போல் முதலீடு செய்த ரூ 525 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்காத நிலையில் தேவநாதன் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன.

இந்த வழக்கை சென்னை குற்ற பொருளாதார பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று திருச்சியில் இருந்த அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தேவநாதன் மட்டுமில்லாமல் குணசீலன், மகிமைநாதன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தேவநாதனிடம் 8 மணி நேரமாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணைக்கு பிறகு சென்னை ஹைகோர்ட்டில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ், பாஜக ஆதரவாளர் ஆவார். இவர் டிவி சேனலையும் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் தலைவராகவும் தேவநாதன் இருந்து வருகிறார். 1872 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் பலர் தங்களுக்கு கிடைத்த பணப்பலன்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாக தெரிகிறது. முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி ரூ 50 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அது போல் ரூ 525 கோடி வரையிலான வைப்பு தொகையை திரும்ப தர நிதி நிறுவனம் மறுப்பதாகவும் முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.

நிதி நிறுவனம் அளித்த 150 காசோலைகள் பவுன்ஸ் ஆகி வங்கியிலிருந்து திரும்பிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள். இது தொடர்பாக லோக்சபா தேர்தல் நேரத்திலேயே தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மோசடி தொடர்பாக கடந்த 6ஆம் தேதி மயிலாப்பூர் நிதி நிறுனம் அருகே 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை குற்ற பொருளாதார பிரிவு போலீஸார் தேவநாதன் யாதவ்வை திருச்சியில் வைத்து நேற்று (ஆகஸ்ட் 13) கைது செய்தனர்.

இதையடுத்து தேவநாதன் மீது சென்னையில் வழக்கு இருப்பதால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது நிதி மோசடி புகார் எழுந்ததால் சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா , பிரச்சாரம் செய்யவிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 4,27,677 வாக்குகளையும் அதிமுக சார்பல் போட்டியிட்ட சேவியர் தாஸ் 2,22,013 வாக்குகளையும் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவநாதன் யாதவ் 1,95,788 வாக்குகளையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் தமிழகத்தில் பணக்கார வேட்பாளர்களில் தேவநாதனும் ஒருவர் என சொல்லப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+