மக்களே அலர்ட்! சென்னை டூ குமரி வரை அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
சென்னை: தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கனமழை பெய்தது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்துள்ளது. கடுமையான வெப்பம் நிலவிய நிலையில், பருவமழையும் கண்ணா மூச்சி காட்டி வந்தது.

இதனால், மழை எப்போது பெய்ய தொடங்கும் என மக்கள் ஏக்கத்துடன் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மக்கள் மனதையும் குளிரவைத்துள்ளது. பருவமழை சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மழைக்கால நோய்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இருமல், சளியுடன் ஏற்படும் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
சாதாரண காய்ச்சல் இல்லை: சாதாரணமான பாராசிட்டமால் மாத்திரைக்கும் இந்த காய்ச்சல் குணம் ஆவதில்லை. பல நாட்களுக்கு காய்ச்சல் நீடிக்கிறது. காய்ச்சலும் மிகக் கடுமையானதாக இருப்பதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாதாரணமாக இது போன்ற குளிர் நேரங்களில் ஏற்படும் காய்ச்சல்கள் இரண்டு மூன்று தினங்களில் குணம் ஆகிவிடும் என மக்கள் பலரும் நினைத்துக் கொண்டு சுய மருத்துவம் செய்து கொள்ளவும் செய்கின்றனர்.
ஆனால், அதற்கு இந்த காய்ச்சல் குணம் ஆவதில்லை. குறைந்தது ஒருவாரமாவது பாடாய் படுத்துகிறது. சென்னை முதல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மழைக்கால நோய்களாக இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தாலும் இதற்கான காரணம் மருத்துவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
சமூக இடைவெளி: காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேபோல், காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்கள், காய்ச்சிய குடி நீரையை பருக வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். மேலும் மக்கள் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
அதேபோல், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி போட்டுக் கொள்வதை தவிர்த்து விட்டு மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும் என்பதும் மருத்துவர்கள் கூறும் தகவலாக உள்ளது. இதற்கிடையே, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்களும் மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
3 நாட்களுக்கு மேல் இருந்தால்: உடனுக்கு உடன் காய்ச்சல் பாதிப்பை கண்டறிந்து உரிய சிகிச்சைகள் இந்த முகாம்கள் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பு தெரியவந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதாவது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications