மாணவர்களுக்கு வரப்பிரசாதம்.. மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். இந்த தேர்வு எழுத மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருடத்திற்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும். கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த கல்வி உதவி தொகை அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் கிடைக்காது. உதவித்தொகையை சென்னையை தவிர பிற மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. மாவட்டத்திற்கு தலா 50 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வி உதவித்தொகையை பெறும் மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்க ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திறனாய்வு தேர்வுக்கு மாண்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தேர்வுத்துறை இயக்குநர் லதா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஊரகப் பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வை எழுதும் மாணவர்க்ளின் பெற்றோர் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும். தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் தலைமை ஆசிரியர் வாயிலாக நவம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.
மாணவர்களிடம் பெற்ற விண்ணப்பங்களை தேர்வுத் துறை வெப்சைட்டில் நவம்பர் 14 முதல் 22-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கொடுக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவ மாணவிகளின் பள்ளி இருக்கும் ஒன்றியத்திலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கான வரப்பிரசாதம் போல அரசின் இந்த திட்டம் அமைந்துள்ளதால், தகுதியான கிராமப்புற மாணவர்கள் இந்த தேர்வினை எழுதி மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெற முடியும். நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க முடியாது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications