Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருவி படம் எடுத்தது யாரு? அப்போ தெரியலயா.. விஜய் நினைப்பது நடக்காது.. நடிகர் போஸ் வெங்கட் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதியிடம் குருவி படம் நடிக்கும் போது, சினிமா வாரிசு என்று கேள்வி கேட்காமல், அரசியலுக்கு வந்த பிறகு வாரிசு என்று கேட்கிறார் என்றும், ஊழல் ஆட்சி என்று பொய் சொல்கிறார் எனவும் நடிகர் விஜய்யை போஸ் வெங்கட் விமர்சித்துள்ளார். ரசிகர்களின் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்றும் போஸ் வெங்கட் கூறினார்.

விஜய் குறித்து ஆரம்பத்தில் இருந்தே விமர்சித்து வந்த போஸ் வெங்கட், உதயநிதி ஸ்டாலினை பார்த்து வாரிசு என்று சொல்கிறாரே, அவரது ரெட் ஜெயண்ட் படத்தில் நடித்த போது அது தெரியவில்லையா என்றும், ஊழல் ஆட்சி என்று விஜய் பொய் சொல்கிறார் என்றும் கூறினார். மேலும் மதுரைக்கு விஜய் வந்தபோது கூட்டம் அதிகமாக வந்தது என்றார்கள். அதை விட அஜித்துக்கு கூட்டம் கூடும் என்றும் போஸ் வெங்கட் கூறினார். இது தொடர்பாக போஸ் வெங்கட் கூறியதாவது:-

bose-venkat-has-criticized-actor-vijay-saying-that-while-acting-in-the-film-kuruvi-with-udhayanidhi

விஜய் பொய் சொல்கிறார்

சினிமாவில் நான் விஜய்யை மதிக்கிறேன். விஜய் பொய் சொல்லக்கூடாது. 2026 சட்டசபை தேர்தலில் நிற்கப் போகிறேன் என்பதற்காக நான் பொய் சொல்வேன் என்று விஜய் சொல்கிறார். விஜய் பொய் சொல்லக்கூடாது. ஊழல் ஆட்சி நடக்கிறது என்று ஏன் பொய் சொல்கிறார்.

நான் சொல்கிறேன் எனக்கு அண்ணன் முருகனை பிடிக்காது. அவர் ஊழல் செய்துவிட்டார். ஆனால் நான் சொன்னேன் என்பதற்காக அதை நீங்க நம்பக்கூடாது. என்னிடம் கேள்வி கேட்க வேண்டும். அவர் என்ன ஊழல் செய்தார்? என்று. 6 மாதத்துக்கு முன்பு விஜய் ஊழல் ஆட்சி நடக்கிறது என்று சொன்னார். நான் அப்போதே அதற்கு பதில் கூறினேன். அந்த ஊழல் பட்டியலை வெளியிடுங்கள் என்று சொன்னேன். ஆனால் இன்று வரை அவர் ஊழல் பட்டியலை விடவில்லை. அப்போது என்ன அர்த்தம்.. விஜய் பொய் சொல்கிறார் என்று தானே அர்த்தம். இதைத் தான் மேடையிலும் சொன்னேன்.

குருவி படத்தின் போது ஏன் கேட்கவில்லை

பிறகு வாரிசு அரசியல் என்று சொன்னார். உடனே நான் என்ன சொன்னேன், "நீங்க வாரிசு இல்லையா" என்று கேட்டேன்.. உங்க தாத்தாவிடம் ஆரம்பித்து இப்போது உங்க மகன் வரை சினிமாவில் வந்து இருக்கிறார்கள். அப்போ அது வாரிசு இல்லையா என்று கேட்டேன். கலைஞர் கூட சினிமாவில் நன்றாக வசனம் எழுதுவார். தளபதி ஸ்டாலின் கதாநாயகனாவும், நாடகங்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் சின்னவர் வந்தார். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் படங்களை எடுத்தார்.

முதல் படமாக நீங்க யாரை வாரிசு என்று சொன்னீர்களோ அதில் விஜய்யே கதாநாயகனாக நடித்தார். பின்னர் அவர் கதாநாயகனாக நடித்தார். அரசியலுக்கும் வந்தார். ஆனால் அவரை பார்த்து இப்போது நீங்க வாரிசு அரசியல் என்று சொல்கிறீர்கள். அவரை பார்த்து அன்றைக்கு நீ சினிமா வாரிசு என்று சொல்லவில்லை. உங்க தாத்தா பட வசனம் எழுதுவார், உங்க அப்பா கதாநாயகனாக நடிப்பார், நீ படம் தயாரிப்பாய் நான் ஏன் இந்த குருவி படத்தில் நடிக்க வேண்டும் என்று ஏன் அப்போது கேட்கவில்லை.

கடைசியில் அனாதையாக தான்

ஏன் அங்கே மட்டும் அந்த கேள்வியை கேட்கவில்லை. இந்த கேள்வி வருமா? வராதா?, அங்கே கேட்கப்படாத வாரிசு என்ற கேள்வி, அரசியலிம் மட்டும் ஏன் இந்த கேள்வி.. இது சுயநலமா இல்லையா.. பொய்யா பொய் இல்லையா.. யாராவது இதை கேட்க வேண்டுமா இல்லையா.. இதைத்தான் நான் கேட்டேன். ஏன் கோபப்படுகிறீர்கள்.

மதுரைக்கு விஜய் வந்த போது நிறைய கூட்டம் கூடுகிறதாக பேசுகிறார்கள். ஏன் நயன்தாரா வந்தால் கூடத்தான் கூட்டம் வரும். அஜித்துக்கு இதை விட டபுளாக வருவார்கள். முதலில் இப்படித்தான் விஜய்யை வரவேற்க நிறைய பேர் வருவாங்க. முதல்முறை வரும் போது அதிகம்பேர் வருவாங்க. அடுத்து முறை நீங்க போகும் போது அது குறைந்துவிடும். அடிக்கடி செல்லும்போது பாதி, கால்வாசியாக மாறும். அதற்கு பிறகு ஒருத்தரும் வரமாட்டாங்க. கடைசியில் அனாதையாக தான் செல்ல முடியும்.

வாக்காக மாறவே மாறாது

விஜயகாந்துக்கு மட்டுமில்லை நிறைய பேருக்கு இப்படித்தான் நடந்திருக்கு. நடிகர் என்றால் ரசிகர்கள் வரத்தான் செய்வார்கள். ஆனால் அது வாக்காக மாறாது. ஓட்டு போடுபவர்களுக்கு இவரால் எனக்கு, என் குடும்பத்துக்கு என்ன நடந்தது என்பதை தான் சிந்திப்பார்கள். எனவே இது வாக்காக மாறவே மாறாது. இன்று கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறும் என்று விஜய் நினைக்கிறார். அது நடக்காது. தேர்தலுக்கு பிறகு தான் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+