சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான மேலும் சில சொத்துகளை பறிமுதல் செய்தது தமிழக அரசு
சென்னை: சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான மேலும் சில சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2017-ல் உச்சநீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது.

இந்த சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி விடுதலையாகினர். சுதாகரன் இன்னமும் அபராத தொகையை செலுத்தவில்லை. அபராத தொகையை சுதாகரன் செலுத்திவிட்டால் அவரும் சிறையில் இருந்து விடுதலையாவார்.
இதனிடையே பெங்களூருவில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த சசிகலா இன்று சென்னை புறப்பட்டார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பலவற்றை தமிழக அரசு அதிரடியாக பறிமுதல் செய்தது.
இன்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருவருக்கும் சொந்தமான மேலும் சில சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சசிகலா தரப்புக்கு அதிர்ச்சி தரும் வகையில் தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications