முதலமைச்சரின் காலை உணவு திட்டம்.. திடீர்னு பரவிய "குரல்".. யாரந்த பெண்? சாட்டையை சுழட்டிய பெரம்பலூர்
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து, தவறான தகவலை பெண் அதிகாரி பரப்பியுள்ளார். என்ன நடந்தது?
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது... இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்த நிலையில், மாணவர்களின் வருகைப்பதிவும் அதிகரித்தது தெரியவந்தது. அதனால்தான், இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முதல்வர் முடிவு செய்தார்..
விரிவாக்கம்: இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 31,00 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணி தீவிரமானது. இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் 25ம் தேதி, காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.. மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்திருந்தார்.
சபாஷ் பணிகள்: அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் துணை நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் பலமுறை நெகிழ்ந்து சொல்லி உள்ள நிலையில், இன்றைய காலை உணவு விரிவாக்க திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திட்டம் குறித்துதான், ஒருவர் தவறான தகவலை பரப்பியிருக்கிறார்.. பெரம்பலூர் மாவட்டத்தில், உணவு தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் மேனகா என்பவர் இதுகுறித்து தவறான தகவலை பகிர்ந்துள்ளார்.
ரவை, சேமியா: அதாவது, "வேப்பூர் வட்டாரத்தில் சில பள்ளிகளில் காலை உணவு திட்டம் தயாரிக்க, சமையல் கேஸ், ரவா, சேமியா போன்ற பொருட்கள் தட்டுப்பாடு இருக்கிறது.. இப்போதைக்கு அந்த பொருட்கள் ஸ்டாக் இல்லை.. அதனால், அந்த உணவு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஸ்பான்சர் பெற்று, உணவு தயாரியுங்கள், இதைவிட்டால் வேறு வழியில்லை, கலெக்டரே இந்த உத்தரவை போட்டிருக்கிறார்" என்று மேனகா சக பணியாளரிடம் வாட்ஸ்அப் போனில் பேசியிருப்பதாக தெரிகிறது.
இந்த குரல் பதிவின் ஆடியோ, இணையத்தில் கசிந்து வைரலாகிவிட்டது.. இந்த ஆடியோ பேச்சை கேட்டதுமே, மாவட்ட கலெக்டர் கற்பகம், இதற்கு உடனடியாக மறுப்பு சொன்னதுடன், இது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தினார்.
அதிரடி சஸ்பெண்ட்: இந்நிலையில், காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை பரப்பியதாக வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்) மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications