சென்னை அண்ணா ஆர்ச் அருகே.. போதையில் வந்தவரின் பைக் மோதி 6 மாத குழந்தையுடன் தாய் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் பெண்ணும் கைக்குழந்தையும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் பூங்குழலி (28). இவருக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை தனது குழந்தையை தூக்கிக் கொண்டு அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா நினைவு வளையம் அருகே சாலையை கடக்க முயன்றார்.

Mother and 6 months baby died of road accident near Anna Arch, Chennai

அப்போது மது போதையில் பெண் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் , பூங்குழலி மற்றும் அவரது கைக்குழந்தை மீது வேகமாக மோதியுள்ளார். இதில் பெண்ணும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர்.

அப்போது சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பூங்குழலி மற்றும் அவரது குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து அதிவேகமாக பைக்கில் வந்து விபத்தை ஏற்படுத்திய நபரையும் அவருடன் வந்த பெண்ணையும் போலீஸார் அண்ணாநகர் கே 4 காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+