அம்மா Rocked.. உதயநிதி Shocked.. மணமகளுக்கு தாலி கட்டப் போன தாய்.. பார்த்ததும் பதறிப்போன கூட்டம்!
சென்னை: திருமண பரபரப்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து தாலியை வாங்கிய தாய், மணமகனிடம் கொடுப்பதற்கு பதில் மணமகளுக்கு தானே கட்ட முயன்றதால் மேடையில் சிரிப்பலை எழுந்தது. தாயே தாலி கட்டப் போனதைப் பார்த்து பதறிவிட்டார் மேடையில் இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தங்கம் மாளிகையில், எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் துணை முதல்வர் உதயநிதி. 48 ஜோடிகளுக்கும் கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்கள் மற்றும் ரூபாய் 25,000 ரொக்கம் வழங்கி மண வாழ்க்கை சிறப்பாக வாழ்த்தினார் துணை முதல்வர் உதயநிதி.
அப்போது சூர்யகுமார் - குணவதி ஜோடிக்கு துணை முதல்வர் உதயநிதி தாலி எடுத்துக் கொடுத்தார். தாலியை எடுத்து மணமகளின் தாயிடம் கொடுத்தார் உதயநிதி. பதற்றத்தில் இருந்த தாய், தானே தாலியை வாங்கி மணமகள் கழுத்தில் கட்டப் போனார். இதைப் பார்த்து ஷாக் ஆன உதயநிதி, "என்னம்மா நீங்க கட்டப்போறீங்க.. மாப்ளைக்கிட்ட கொடுங்க" என சிரித்தபடி கூறினார்.

உடனே நிலைமையை உணர்ந்த தாய், மணமகனிடம் தாலியை கொடுத்து கட்டச் செய்தார். இந்த நிகழ்வால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. மேடையில் இருந்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வைக் கண்டு சிரித்தனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“விளையாட்டு முக்கியம் பிகிலு”.. அரசு பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications