தாய் பத்திரம்.. ஆன்லைனிலேயே.. உங்களது சொத்து பத்திர நகல்களை பெற முடியுமா? ரொம்ப ஈஸி.. இதை பாருங்க
சென்னை: சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால், அதை எப்படி பெற வேண்டும் தெரியுமா? ஆன்லைனிலேயே சொத்து பத்திரங்களின் நகல்களை எப்படி பெறுவது தெரியுமா? ரொம்ப ஈஸி.
நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு கால விரயம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், முதல்வர் ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் "எங்கிருந்தும் எந்நேரத்திலும்" என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
வசதிகள்: மேலும் பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in /citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைத்தார்.. இந்த ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தேவையில்லாமல் அலைய தேவையில்லை... நேரம் மிச்சமாகும்.
ஆன்லைன் வசதி: அதேபோல, தொலைந்த பத்திரத்தையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.. முன்பெல்லாம் பத்திரம் தொலைந்து போய்விட்டால், அதை மீட்பது மிகவும் சிரமம்.. தொலைந்து போன அல்லது பழைய சொத்து பத்திரம் நகல் எடுக்க வேண்டுமானால், தாலுகா அலுவலகத்துக்குதான் நேரில் செல்ல வேண்டும்..
அங்கே அவர்கள் கேட்கும் மொத்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு பலநாள் அலைந்து திரிந்துதான், உரிமையாளர்கள் தங்களது சொத்து பத்திர நகலை பெறுவார்கள். ஆனால், இப்போது அப்படியெல்லாம் கிடையாது. பொதுமக்களின் வசதிக்காக எல்லாமே ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.. வீட்டுக்குள்ளிருந்தே தொலைந்து போன பத்திரத்தின் நகலை பெற முடியும்.
வழிமுறைகள் என்னென்ன?
- இதற்கு முதலில் https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும். உள்ளே நுழைய உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும்
- "உள்நுழைவு" என்ற இடத்தில், உங்களுடைய பெயர், பாஸ்வேர்ட் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள கேப்சபா கோடினை பிழையில்லாமல் தந்து உள்ளே நுழைய வேண்டும்.
- ஒருவேளை இந்த இணையதளத்துக்குள் இப்போதுதான் முதல்முறையாக நுழைகிறீர்கள் என்றால், "பயனர் பதிவு" என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்
- கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து, கணக்கை உருவாக்க வேண்டும்.. இப்போது உங்கள் செல்போன் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும்.. அந்த் நம்பரை பதிவிட்டால், உங்கள் புது கணக்கு ஓபன் ஆகிவிடும்.
- "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஸ்கிரீனில் நிறைய ஆப்ஷன்கள் தென்படும். இதில் "சான்றிக்கப்பட்ட நகல்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- "தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், புதிய ஸ்கிரீன் தோன்றும்
- இந்த பக்கத்தில் "ஆவணத்தின் வகைப்பாடு" என்ற இடத்தில் "சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்
- பிறகு, "ஆவண எண்" என்பதில், உங்களுடைய வில்லங்க சான்றிதழில் உள்ள ஆவண நம்பரை பதிவிட வேண்டும்
"சார் பதிவாளர் அலுவலகம்" என்ற இடத்தில், தாங்கள் எந்த அலுவலகத்தில் பத்திரம் பதவு செய்தீர்களோ, அந்த அலுவலகத்தினை தேர்வு செய்ய வேண்டும்
"ஆண்டு" என்ற இடத்தில், எந்த ஆண்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டதா, அந்த ஆண்டினை தேர்வு செய்ய வேண்டும்
இப்போது, அங்கு தென்படும் கேப்சா கோடினை அவற்றில் உள்ளது போல் டைப் செய்து, "தேடுக" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், இப்போது தாங்கள் பதிவு செய்த ஆவணங்களின் விவரங்கள் பதிவாகிவிடும்.
பிறகு "இணையவழி விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "தனிப்பட்ட விவரங்கள்" என்ற ஆப்ஷனில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, "சரி" என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
- "கட்டண விவரங்கள்" என்ற பக்கம் ஓபன் ஆகிவிடும். இதில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தரப்பட்டிருக்கும். அதில் "ஆன்லைன் மூலம்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, "செலுத்துக" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஆன்லைனில் பணம் கட்டியபிறகு, ACKNOWLEDGE RECEIPT கிடைத்துவிடும்..
பிறகு வெப்சைட்டின் முகப்பு சென்று "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "சான்றளிக்கப்பட்ட நகல்" என்ற ஆப்ஷனையும், பிறகு "கோரிக்கை பட்டியல்" என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது, உங்களுடைய விண்ணப்பத்தின் எண், பதிவு எண், ஆவணத்தின் வகைப்பாடு, விண்ணப்ப நாள், தொகை செலுத்தப்பட்ட நிலைப்பாடு, கையொப்பட்ட ஆவணம் போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.
பத்திர நகல்கள்: இப்போது 2 நாள் கழித்து, இந்த இணையதளத்தை செக் செய்து, "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "சான்றளிக்கப்பட்ட" என்ற ஆப்ஷனையும் பிறகு "கோரிக்கை பட்டியல்" என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்தால், கீழ் பகுதியில் கையொப்பமிட்ட இடத்தில் டவுன்லோடு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால், உங்களுக்கு தேவையான பத்திர நகல்களை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications