சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேனகாவின் அட்டகாசம்.. பகலில் காட்டு பகுதி.. ராத்திரியானா வீட்டுக்குள் அடைப்பாங்க.. மாமியார் கண்ணீர்!

மாமியாரை கடத்திய மருமகள் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மாமியாரை பிளான் போட்டு கடத்திய மருமகள் !

    சென்னை: "பகல்ல ஒரு காட்டுப்பகுதிக்கு கூட்டிட்டு போய்டுவாங்க.. ராத்திரி ஆனா ஒரு இருட்டு அறையில் அடைச்சி வெச்சிடுவாங்க.. 3 நாளா நான் சாப்பிடல.. அவங்க குடுத்த சாப்பாட்டிலயும் விஷம் இருக்குமோன்னு பயந்துட்டேன்" என்று கண்ணீருடன் சொல்கிறார் இதே மேனகாவால் கடத்தப்பட்ட மாமியார் பத்மினி!

    சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி. 70 வயதான இவருக்கு, செந்தில், ராஜு என, 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் கல்யாணமாகி தனித்தனியே படப்பையில் வசித்து வந்தனர். ஆனால், சொத்து சம்பந்தமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்தது.

    மறைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவிதான் பத்மினி. இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த சொத்துக்காக சுப்பராயன், மற்றும் இளையமகன் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டதாக சொன்ன நிலையில், மூத்த மகன் செந்திலை அப்போதிருந்தே காணவில்லை.

    பச்சை குத்திருக்கியே.. இது யாரு.. என்ன உறவு.. 33 வயது காதலியை அறைந்தே கொன்ற 23 வயது காதலன்! பச்சை குத்திருக்கியே.. இது யாரு.. என்ன உறவு.. 33 வயது காதலியை அறைந்தே கொன்ற 23 வயது காதலன்!

     பத்மினி

    பத்மினி

    இந்நிலையில், இவரது மனைவி மேனகா, 5 கோடி ரூபாய் சொத்துக்காக மாமியார் பத்மினியை துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஆள்வைத்து கடத்தி, அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யும்போது போலீசில் வசமாக சிக்கி உள்ளார். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது. போலீஸாரிடம் மேனகா அளித்த வாக்குமூலத்தில் சொன்னதாவது:

     சொத்துக்கள்

    சொத்துக்கள்

    "என் சொந்த ஊர் பெரியபாளையம் பக்கம் இருக்கிற கொமக்கம்பேடு கிராமம்தான்.. எனக்கு செந்திலுடன் கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். என் மாமனார் சுப்பராயன் கான்ட்ராக்ட் வேலை பார்த்து வந்தார். அவருக்கு உதவியாகதான் என் கணவரும் இருந்தார். ஆனால் சொத்துக்களை பிரிக்கும்போது, படப்பை மெயின் ரோட்டில் உள்ள இடத்தை என் கொழுந்தனார் ராஜ்குமாருக்கு தந்துவிட்டார்.

     ராஜேஷ் கண்ணா

    ராஜேஷ் கண்ணா

    இதை செந்தில் தட்டிக் கேட்கபோய் பிரச்சனைஆகி 2014-ல் கொலை வரை போய்விட்டது. அப்பறம் செந்தில் ஜெயிலுக்கு போய்விட்டார். எனக்கு சப்போர்ட்டா இருந்தது டிரைவர் ராஜேஷ்கண்ணா மனைவிதான். இதுக்கப்பறம் என் கணவன் செந்தில் ஜாமீனில் இருந்து வெளியேவந்தார். ஆனால் , அவரை காணோம்.. தேடியும் கிடைக்கவில்லை. 2018-ல் என் மாமனாரையும் கொலை செய்த வழக்கில் எனக்கு உதவி செய்த ராஜேஷ் கண்ணாவை போலீஸார் கைது செய்தனர்.

     புகார்

    புகார்

    மீதமிருக்கும் சொத்துக்களை வாங்கதான் என் மாமியாரை வீட்டுக்கு கூட்டிச்சென்றேன்" என்கிறார். கூட்டி செல்வதாக இருந்தால், மாமியார் ஏன் சத்தம் போட வேண்டும், கடத்தல் என்று எங்களுக்கு ஏன் புகார் வர வேண்டும்? செந்தில் எங்கே? என்பது போன்ற பல கேள்விகளுக்கு மேனகா பதிலே சொல்லவில்லை என்கிறார்கள்.

     இருட்டு அறை

    இருட்டு அறை

    மீட்கப்பட்ட மாமியார் பத்மினி சொல்லும்போது, "சொத்துக்காக என்னை கடத்திட்டு வந்தது மேனகாதான்.. கையெழுத்து போடும்படி என்னை அடித்தார்கள்.. துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டினர்.. மொத்தம் 3 நாள் அவ கட்டுப்பாட்டில் இருந்தேன்.. பகல்ல காட்டுப் பகுதிக்கு கூட்டிட்டு போவாங்க.. ராத்திரி ஆனா ஒரு இருட்டு ரூமுல அடைச்சி வைப்பாங்க.. எனக்கு இட்லி, டீ மட்டும்தான் தந்தாங்க.. ஏதாவது கலந்து இருப்பாங்களோன்னு நினைச்சு, அதைகூட நான் சாப்பிடல.

     2 கொலைகள்

    2 கொலைகள்

    இந்த சொத்துக்காக என் புருஷன், 2-வது மகனை பறிகொடுத்துட்டேன்.. முதல் பையன் செந்தில் எங்கே இருக்கான்னே தெரியல.. கையெழுத்து போட்டு சொத்துக்களை தந்துட்டு இருந்தா என்னைகூட கொன்னு இருப்பாங்க.." என்று கண்கலங்கி சொல்கிறார். தொடர்ந்து மேனகாவிடம் போலீசார் நடத்தி வரும் கிடுக்கிப்பிடி விசாரணையில், எப்படியும் அந்த வீட்டில் நடந்த 2 கொலைகள், கடத்தல், டிரைவருடன் என்ன உறவு? என்பன பற்றின எல்லா உண்மைகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    mother in law kidnapped by her daughter in law for property near chennai and police investigation is going on with them
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X