Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேனகாவின் லீலைகள்.. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கள்ளக்காதல்... அதிர வைத்த சென்னை "ஜோலி"!

சொத்துக்காக கொலைகள் செய்தாரா மருமகள் மேனகா என்ற விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாமியாரை பிளான் போட்டு கடத்திய மருமகள் !

    சென்னை: கொலை, கள்ளக்காதல், கடத்தல் என.. மேனகாவின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. இந்த "சென்னை ஜோலி"யிடம் விசாரணை மும்முரமாகி வந்து கொண்டிருக்கிறது.

    தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்தவர் சுப்புராயன்.. இவர் ஒரு அதிமுக பிரமுகர்.. இவரது மனைவி பத்மினி. இவர்களுக்கு செந்தில், ராஜ்குமார் என 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது. பத்மினி குடும்பத்தினருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன.

    கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே மாமியார் வீட்டு சொத்துமேல் மேனகாவுக்கு ஒரு கண் இருந்துள்ளது. மேனகா மூத்த மருமகள்.

    மைத்துனர்

    மைத்துனர்

    ஆனால், கணவரின் தம்பி ராஜ்குமாருக்கு அதிக சொத்துக்களை பெற்றோர் எழுதி வைத்துள்ளனர். இந்த ஆத்திரத்தில் புருஷனை ஏத்திவிட்டு, "உங்க தம்பிக்கு மட்டும் நிறைய சொத்துக்களை எழுதி வெச்சிருக்காங்களே" என்று சொல்லி சொல்லி... மைத்துனரை கணவரை விட்டே கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    கார் டிரைவர்

    கார் டிரைவர்

    அதாவது 2014-ல் தம்பி ராஜ்குமாரை அண்ணன் செந்தில்குமார் சொத்துக்காக அன்றே கொலை செய்துள்ளார். அது மட்டுமில்லை.. தன் அப்பாவின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் முழுவதையும் தானே அடைய வேண்டும் என்பதற்காக தந்தை சுப்புராயனையும் டிரைவரை வைத்து தீர்த்து கட்டியுள்ளார் செந்தில்குமார். இது 2018-ல் நடந்த கொலை ஆகும்.. இந்த டிரைவர்தான், இப்போது மாமியாரை கடத்த உதவிய ராஜேஷ்கண்ணா!

    செந்தில்குமார்

    செந்தில்குமார்

    தம்பி, அப்பாவை கொன்றது செந்தில்குமார்தான்.. இரு கொலைகளுமே மேனகாவின் தூண்டுதலின்பேரில் நடந்துள்ளதாக போலீசார் கருதுகிறார்கள். இந்த டிரைவர் ராஜேஷ் கண்ணா யார் என்றால், தோழியின் கணவராம். மைத்துனர் கொலை செய்யப்பட்டபோது, இவர் வீட்டில்தான் மேனகா போய் தங்கி இருந்துள்ளார். அப்போது ராஜேஷ்கண்ணாவுடன் நெருக்கம் அதிகமாகிவிட்டது. உடனே கணவரையும் தீர்த்து கட்ட மேனகா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    கொலைகள்

    கொலைகள்

    கணவரை காணவில்லை என்று போலீசில் கண்துடைப்புக்கு ஒரு புகாரையும் தந்து ஒதுங்கிவிட்டார் மேனகா. ஆக.. மாமனார், மைத்துனர் என்று 2 பேரின் கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறார் மேனகா.. கணவனின் கதி என்னவென்று தெரியவில்லை.. இப்போது மாமியாரை துப்பாக்கி முனையில் கடத்தி உள்ளார்.. கிட்டத்தட்ட கேரளத்து ஜோலி கதையை போலவே உள்ளது மேனகாவின் கதையும்.. இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சென்னை ஜோலி

    சென்னை ஜோலி

    இன்னும் துப்பாக்கியுடன் எஸ்கேப் ஆகி உள்ள ராஜேஷ் கண்ணா சிக்கினால்தான் பல விஷயங்கள் வெளியே வரும் என தெரிகிறது.. அத்துடன் செந்தில்குமார் என்ன ஆனார் என்ற உண்மையும் தெரியவரும். கொலை, கள்ளக்காதல், கடத்தல், என சென்னை ஜோலியின் இந்த தில்லுமுல்லுவினை கண்டு போலீசாரே மிரண்டு போயுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+