மகளின் காதலனுடன் தாயின் கள்ளக்காதல்.. தங்க நகைக்காக கணவனை கதறவிட்ட மனைவி.. இப்படியும் ஒரு பெண்ணா?
சென்னை: கள்ளக்காதல்கள் கொடூரங்கள் பெருகி வரும்நிலையில், குடும்பங்களும் பிரிந்து வருகின்றன. இதனால் தம்பதிகளின் குழந்தைகளின் எதிர்காலமும் சேர்ந்தே சீரழிக்கப்படுகிறது. அதேபோல கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளைகளை கொல்லும் கொடுமையும் தலைதூக்கி வருகிறது.. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மும்பை கோரேகான் பகுதியை சேர்ந்த தம்பதி ரமேஷ் - ஊர்மிளா.. இதில் ரமேஷ் மாநகராட்சி ஆபீசில், நீர் வழங்கல் துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் 44 வயதான ஊர்மிளாவுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. இதனால் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பாராம்.
ஊர்மிளாவின் கள்ளக்காதல்
அதேபோல ஊர்மிளாவின் 18 வயது மகள், வேறொரு இளைஞரை காதலித்து வந்துள்ளார்.. இதனால் மகளின் காதலன் என்பதால், அடிக்கடி இந்த இளைஞரின் வீட்டுக்கு ஊர்மிளா சென்று வந்துள்ளார்.. நாளடைவில் மகளின் காதலனையும், ஊர்மிளாவே காதலிக்க ஆரம்பித்துவிட்டார்.
இப்போது மகள் வீட்டில் இல்லாத நேரத்திலும், மகளின் காதலனுடன் ஊர்மிளா உல்லாசமாக இருக்க தொடங்கியிருக்கிறார்.. ஒருபக்கம் தன்னுடைய கள்ளக்காதலன், மறுபக்கம் மகளின் காதலன் என இருவரிடமும் தினமும் போனிலும் பேசி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஊர்மிளா தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒன்றாக வாழ முடிவு செய்தார். இதற்காக வீட்டில் வைத்திருந்த நகைகளை எல்லாம் விற்று, ரூ.10 லட்சத்தை கள்ளக்காதலனின் வங்கிக்கு அனுப்பி வைத்தார். மிச்சமிருந்த நகையை, மகளின் காதலனுக்கும் தந்தார்..
மகளின் காதலன்
இப்போது பீரோவிலிருந்த மொத்த நகைகளையும் 2 காதலர்களுக்கு தந்துவிட்ட நிலையில், திடீரென ஊர்மிளாவுக்கு பயம் வந்துவிட்டது.. பீரோவிலிருந்த நகைகள் எங்கே என்று கணவர் கேட்டால் என்ன பதில் சொல்வது? என்று விழித்தார். எனவே கணவர் தன்னிடம் நகையை கேட்பதற்கு முன்பு, தாமே முந்திக் கொள்வோம் என்று முடிவு செய்தார்.
இதற்காக, வீட்டிலிருந்த நகைகளை கணவரே திருடிவிட்டார் என்று பழி சுமத்தினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பாவி கணவர் ரமேஷ், நகைகளை எடுக்கவில்லை என்று கதறினார். ஆனாலும் ஊர்மிளா விடவில்லை.. ஆவேசமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நகைகளை கணவர் திருடியதாக புகார் தந்தார்..
இந்த புகாரின்பேரில் போலீசாரும் ஊர்மிளா வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் நகைகளை திருடியதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.. இதனால் ஊர்மிளா மீதே போலீசாருக்கு சந்தேகம் திரும்பியது.. உடனே ஊர்மிளா, ரமேஷ் இருவரின் செல்போன்களையும் ஆய்வுசெய்தனர்.
அப்போதுதான் தன்னுடைய கள்ளக்காதலன், மகளின் காதலன் என இருவரிடமும் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. உடனே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் ஊர்மிளா..
அப்போதுதான் நடந்த உண்மை மொத்தத்தையும் சொல்லிவிட்டார்.. கள்ளக்காதலனுடன் புது வாழ்க்கையை துவங்க திட்டமிட்டிருந்ததும், மகளின் காதலனுடன் உறவு வைத்திருந்ததும், நகைகளை இருவருக்கும் விற்று தந்ததும் தெரியவந்தது.. இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், ஊர்மிளாவிடம் தொடர் விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications