சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோட்டார் வாகன வரி.. வாகன உரிமையாளர்களுக்கு ஆறுதல் செய்தி.. காலஅவகாசம் நீட்டிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கு ஆண்டு வரி செலுத்த காலஅவகாசம் ஏப்ரல் 10ம் தேதியாக இருந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக அவகாசத்தை ஜுன் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர வேறு விததமாக வாகனங்களின் போக்குவரத்து முடங்கி உள்ளது. பேருந்து சேவைகள் சுமார் 50 நாட்களாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

motor vehicle taxes: Extension of time till June 30 to pay motor vehicle tax

இதனால் பேருந்து உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த சூழலில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அரசு ஆண்டுவரி செலுத்த ஜுன் 30 வரை காலஅவகாசத்தை நீட்டித்துள்ளது

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க இந்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக, பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் மோட்டார் வாகனச் சட்டம் 1974ன்படி செலுத்த வேண்டிய ஆண்டு வரி காலக்கெடுவான 10.04.2020 மற்றும் காலாண்டு வரி காலக்கெடுவான 15.05.2020 வரியினை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஆண்டு வரி மற்றும் காலாண்டுக்கான அனைத்து வகை வாகனங்களுக்கான வரியினை அபராதமின்றிச் செலுத்த 30.06.2020 வரை கால நீட்டிப்பு செய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடையில் மாற்றம்.. அனைத்து வழக்கறிஞர்களும் இனி வெள்ளை நிற ஆடை அணிய உத்தரவு உடையில் மாற்றம்.. அனைத்து வழக்கறிஞர்களும் இனி வெள்ளை நிற ஆடை அணிய உத்தரவு

English summary
tamilnadu govt Extension of time till June 30 to pay motor vehicle tax
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X