விடக்கூடாது.. காத்து கொண்டிருக்கிறது பாஜக.. வெறுப்பு அரசியலை அனுமதிக்க கூடாது.. தயாநிதி மாறன் பேச்சு
முதல்வர் முக ஸ்டாலினுக்கு தயாநிதி மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்
சென்னை: மத வெறுப்பை உருவாக்கி வெறுப்பு அரசியல் செய்ய பாஜக காத்துக்கொண்டிருக்கிறது, அதை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.. மேலும், சிறுபான்மையினருக்கு இருந்த அச்சுறுத்தலை முதலமைச்சர் முக ஸ்டாலின் போக்கியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை கிரஸண்ட் மருத்துவமனையின் 75-வது ஆண்டு தினம் 75 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது...
இன்று நடைபெற்ற மிலாது நபி திருநாள் கொண்டாட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மருத்துவமனை
விழாவில் தயாநிதி மாறன் பேசும்போது, "கிரஸன்ட் மருத்துவமனை அனைத்து மதத்தினருக்கும் இலவசமாக மருத்துவம் வழங்குவதை நான் பாராட்டுகிறேன்.. இந்த பணி இன்னமும் தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.. அதேபோல் இந்த மருத்துவமனை சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிச்சயம் அனைத்து முயற்சிகள் எடுக்கப்படும்..

சிறப்பான ஆட்சி
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததுமே ஒன்று சொன்னார், "எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமில்லை, வாக்களிக்காதவர்களுக்கும் வருத்தப்படும் அளவுக்கு ஆட்சி செய்வேன்" என்றார்.. நிச்சயம் அனைவருக்கும் சிறப்பான ஆட்சி செய்வார்.. இந்த 10 வருடங்களாக இருண்டு கிடந்த தமிழகத்திற்கு விடியல் கொடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்.. சிறுபான்மையினருக்கு இருந்து அச்சுறுத்தல்கள் தமிழகத்தில் அடியோடு போக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

வாபஸ்
சிஏஏ சட்டத்திற்கு இந்தியாவிலேயே முதல் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவரும் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.. சிஏஏவுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.. இந்தியாவிலேயே இதை யாரும் செய்யவில்லை.. திமுக அரசுதான் செய்துள்ளது.. எப்படியாவது மத வெறுப்பை உருவாக்கி, தமிழகத்தில் வெறுப்பு அரசியல் செய்ய பாஜக காத்துக் கொண்டிருக்கிறது..

மதவெறுப்பு
ஆனால், ஒருபோதும் தமிழகத்தில் மத வெறுப்பு அரசியலை நாம் அனுமதிக்கக்கூடாது.. அப்படி மதவெறுப்பை யார் இங்கு உண்டுபண்ணினாலும்சரி, அதற்கு முதல் ஆளாக இருந்து முதல்வர் தடுத்து அரணாக நம்மை காப்பார்" என்றார். முன்னதாக, பங்கேற்ற விழா தலைவர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் தன்னுடைய நன்றியையும் பாராட்டையும் தயாநிதி மாறன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications