காங்கிரஸ் தலைவர் பதவி என்ன மலிவான அரசியல்வாதி சீமானை விமர்சித்தால் கொடுத்துவிடுவார்களா?.. ஜோதிமணி
சென்னை: தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு சீமானின் பதில் என்ன என்பதை கூறமுடியுமா என கரூர் எம்பி ஜோதிமணி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
பாஜக மாநில துணை பொதுச் செயலாளராக இருந்த கே. டி. ராகவன் , வீடியோ காலில் பாஜக பெண் நிர்வாகியிடம் ஆபாச செயல்களில் ஈடுபட்டதாக அண்மையில் வீடியோ வெளியானது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் ராகவன் தொடர்பான வீடியோ வெளியானது குறித்து நாம் தமிழர் கட்சி சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கே.டி. ராகவன்
அதற்கு அவர் கே.டி. ராகவன் விவகாரம் தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று. இதை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதுதான் சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். உலகத்தில் நடக்காத ஒன்றையா ராகவன் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம் பிடிப்பது குற்றம். அந்த வீடியோவை வெளியே விடுவதும் குற்றம்.

பொறுப்பில்லாமல்
வீடியோ எடுத்தவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் பதில் அளித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு கரூர் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின் செயல்பாடுதான் வெட்கக் கேடானது. சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இவர் இப்படிப் பொறுப்பில்லாமல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

விஷம் குடிச்சு செத்து போ
இதற்கு பதிலளித்த சீமான், ஜோதிமணி இவ்வளவு பேசி வேண்டியது இல்லை. ரொம்ப கஷ்டமா இருந்தா விஷம் குடிச்சு செத்துப் போ என ஒருமையில் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஜோதிமணி, பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அப்பட்டமாக கே.டி ராகவன் போன்ற பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கின்ற சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது, பெண்களின் பாதுகாப்பிற்கு போராடுகிற நான் எதற்கு விஷம் குடிக்க வேண்டும்? பாஜகவைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என கேட்ட ஜோதிமணி ஒரு ஊடக பேட்டியில் சீமான் வக்கிரமானவர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஜோதிமணிக்கு பதவி ஆசை என சீமான் விமர்சனம்
இதற்கு பதிலளித்த சீமான், எம்பி ஜோதிமணிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என்ற தகவல் இருக்கிறது. என்னை பற்றி பேசினால் அது உறுதியாகும் என அவர் நினைக்கிறார் என சீமான் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து ஜோதிமணி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் பொதுவெளியில்" யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார்" என்று பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை சிறிதும் வெட்கமின்றி ஆதரிக்கும் திரு. சீமான் எனது கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லமுடியாமல் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்காக நான் பேசுவதாக சொல்கிறார்.

பாஜகவுக்கு ஏன் ஆதரவு
பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களை,பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்பவர்களை தட்டிக்கேட்க பதவி எதுவும் தேவையில்லை. மேலும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி என்பது சீமான் போன்ற மலிவான, அரசியல்வாதிகளை விமர்சிப்பதன் மூலம் கிடைக்ககூடியதல்ல. பெருந்தலைவர் காமராசர் வகித்த மாபெரும் பொறுப்பு. திரு.சீமான் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய எளிய கேள்விகள் இவைதான்
பாலியல் குற்றவாளியான கே டி ராகவனை ஏன் ஆதரிக்கிறார்? பாலியல் குற்றவாளிகளின் புகலிடமான பாஜகவை ஆதரிக்க வேண்டிய தேவை என்ன? பாஜகவின் Bடீம் இல்லையெனில் ஏன் பாஜகவை ஆதரிக்கிறார்? தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு சீமானின் பதில் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications