"எம்.கே-வை சிரிக்க வைத்த எம்.ஆர்.கே.." வெடித்து புன்னகைத்த முதல்வர்.. சட்டசபையில் கலகலப்பு
சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம், எதிர்க்கட்சியினரும் கைத்தட்டலாம் எனக்கூறியதை கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் பலர் வாய்விட்டு சிரித்தனர்.
2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, முதல்முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து 2 வது முறையாக இன்று 2022-23 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதில் சக்கரைத்துறை தொடர்பாக கரும்பு விவசாயம் சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

நாலடியார் பாடலை சுட்டிக்காட்டிய அமைச்சர்
பண்டையத் தமிழர்கள் கரும்பை கசக்கி சாறு பிழிந்து சர்க்கரையாக்கும் தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்து இருந்ததை,
'கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.'
என்ற நாலடியார் பாடலின்மூலம் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் பேச்சால் அவையில் சிரிப்பலை
தொடர்ந்து பேசிய அவர், கடித்தாலும் சுவை தருகிறது கரும்பு, காய்ச்சினாலும் வெல்லம் தருகிறது அதன் சாறு. தொழில் துறை வசமிருந்த சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது உழவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி என்று சொல்லி முடிப்பதற்குள் சக அமைச்சர்கள் ஏதோ சொல்ல அவர்களை பார்த்து செய்கை காட்டி சிரித்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

முதலமைச்சரை சிரிக்க வைத்த எம்.ஆர்.கே.
சிரிப்பை அடக்கிக்கொண்டு அடுத்த வரிகளை அமைச்சர் வாசிக்கத் தொடங்கியபோது அதைக் கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிரித்துவிட்டார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. கரும்பு உற்பத்தி, சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள் அதிக மகசூல் தரக்கூடிய, அதிக சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்பு ரகங்களைப் பயிரிட அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்திடவும், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், 2022-23 ஆம் நிதியாண்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார். "கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின், கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், சென்ற ஆண்டினைப் போலவே, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.195 வழங்கப்படும் என அறிவித்த அமைச்சர், இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்" என்றார்.
Recommended Video

எதிர்க்கட்சிகளும் கைத்தட்டலாம்... இடைமறித்த சபாநாயகர்
"கரும்பு விவசாயிகள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தனர். கடந்த நிதிநிலை அறிக்கையின்போது ரூ.150 ம் இம்முறை ரூ.50 ம் உயர்த்திக் தரப்பட்டு உள்ளது. எனவே எல்லோரும் கைத்தட்டலாம், எதிர்க்கட்சியினரும் கை தட்டலாம். ஏனென்றால் இதே அவையில் பணம் கேட்டு 10 வருடங்கள் போராடினோம்" என அமைச்சர் பேசியதால் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. இதனால் சலசலப்பு ஏற்படவே அமைச்சரை இடைமறித்த சபாநாயகர் அப்பாவு நிதிநிலை அறிக்கையை வாசித்து முடித்துவிடுங்கள் என்றார்.
-
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி












Click it and Unblock the Notifications