முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் முதலில் பார்த்த நண்பர்.. பூங்கொடிக்கு தகவல் சொன்ன சண்முகம்
Recommended Video
சென்னை: முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் முதலில் பார்த்த நண்பர் சண்முகம், முகிலனின் மனைவி பூங்கொடிக்கு தகவல் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகிவிட்டனர். இதைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.
இதையடுத்து அவர் சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலில் ஏறினார். ஆனால் அதில் முகிலனை காணவில்லை. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சண்முகம்
இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸ் குறித்து துப்பு கிடைத்ததாக சிபிசிஐடி போலீஸார் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அவரை நேற்று 9 மணிக்கு திருப்பதி ரயில் நிலையத்தில் போலீஸாருடன் அவரது நண்பர் சண்முகம் பார்த்தாக வீடியோ வெளியிட்டார்.

முகிலன்
இதுகுறித்து நண்பர் சண்முகம் கூறுகையில் ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பதிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். அப்போது திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர போலீஸாருடன் முகிலன் இருப்பதை கண்டேன். முகிலன்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

குரல்
பின்னர் ஆந்திர போலீஸாரிடம் கோஷமிட்டதை வைத்து அது முகிலனின் குரல் என உறுதி செய்தேன். வெள்ளை நிறத்தினாலான சட்டை அணிந்திருந்தார். இதையடுத்து இரவு 9 மணிக்கு முகிலனின் மனைவி பூங்கொடியை தொடர்பு கொண்டு முகிலன் உயிரோடு இருப்பது குறித்து தெரிவித்தேன்.

நகர்ந்த ரயில்
அவர் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் போட்டோ அல்லது வீடியோவாவது எடுத்திருக்கலாமே என கேட்டார். ஆனால் நான் சென்று கொண்டிருந்த ரயில் நகர்ந்து கொண்டிருந்ததால் என்னால் எதுவும் எடுக்க முடியவில்லை என்றார் சண்முகம்.

சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைப்பு
இரவு 10 மணிக்கு காட்பாடி ரயில்வே போலீஸாரிடம் ஆந்திர போலீஸார் முகிலனை ஒப்படைத்தனர். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இரவு 11 மணிக்கு சிபிசிஐடி போலீஸ் ஆய்வாளர் வஜ்ரவேலிடம் முகிலன் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணை
பின்னர் நள்ளிரவு 12.40 மணிக்கு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் 1.30 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அதிகாலை 4.30 மணிக்கு எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications