பேரம் பேசினர்.. படியாததால் மிரட்டி நிறைய ஊசிகளை போட்டனர்.. ஸ்டெர்லைட் நிர்வாகம் மீது முகிலன் புகார்
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் குறித்து பேசவே கூடாது என மிரட்டிய மர்ம நபர்கள் தனக்கு நிறைய ஊசிகள் போட்டு தன்னை துன்புறுத்தியதாகவும் இதன் பின்னணியில் ஸ்டெர்லைட் நிர்வாகம் இருப்பதாகவும் முகிலன் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான நிலையில் அது திட்டமிட்ட சதி என்றும் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
இதையடுத்து அன்றைய தினம் முதல் அவரை காணவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் திருப்பதியில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய முகிலனை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து முகிலன் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் தமிழக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நீதிபதி வீட்டில்
இந்த நிலையில் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரிடம் வாக்குமூலத்தை பெற்றனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், நள்ளிரவு 1 மணிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பேரம்
நீதிபதி வீட்டுக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த முகிலன் கூறுகையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடக் கூடாது என என்னை மர்ம நபர்கள் மிரட்டினர். மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் வாய்த் திறக்காமல் இருக்க பேரம் நடத்தப்பட்டது.

உயிரோடு
இதற்கு நான் பணியாததால் எனக்கு ஏராளமான ஊசிகளை போட்டு துன்புறுத்தினர். என் குடும்பத்தை இல்லாமல் செய்துவிடுவோம் என மிரட்டினர். நான் பல அவமானங்களை சந்திக்க நேரிடும் என்றும் என்னை மிரட்டினர். பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக மக்களாலேயே நான் இதுவரை உயிரோடு இருந்தேன்.

வேறு யார்
என்னை கடத்தியது உண்மைதான். இதன் பின்னணியில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை தவிர வேறு யார் இருக்க முடியும் என பரபரப்பு தகவல்களை முகிலன் எழுப்பினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications