புண்படுத்திகிட்டே இருக்காரு.. இபிஎஸ் மீது முக்குலத்தோர் மீண்டும் அதிருப்தி! என்ன காரணம் தெரியுமா?
சென்னை : எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றது முதல் தற்போது வரை அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயங்களை சேர்ந்தவர்களை புறக்கணித்து வருவதோடு அவர்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தென் மாவட்டங்களில் அவருக்கு எதிராக நிச்சயம் பணியாற்றுவோம் என முக்குலத்தோர் சமுதாய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தனிப்பட்ட தலைவர்களின் மோதலானது சில இடங்களில் மட்டும் சமூக அளவிலான மோதலாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொங்கு மண்டலம் தென் மண்டலம் ஆகிய இரண்டு மண்டலங்களுமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

முக்குலத்தோர் சமூகம்
ஓபிஎஸ். நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு எனவும், தென் மண்டலங்களிலும் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன்,எடப்பாடி பழனிச்சாமி , எம்ஆர் விஜயபாஸ்கர் என ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இரு மண்டலங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தென் மண்டலத்தில் குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தை தொடர்ந்து புறக்கணிப்பதாக புகார் கூறுகின்றனர் தென் மாவட்ட நிர்வாகிகள்.

ஓபிஎஸ் புறக்கணிப்பு
சசிகலா, டிடிவி தினகரன் நீக்கம் தற்போது ஓபிஎஸ் புறக்கணிப்பு என கட்சியின் முக்கிய முக்குலத்து நிர்வாகிகளை நீக்கிவிட்டு தங்கமணி, வேலுமணி என கொங்கு மண்டல நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக புகார் எழுந்தது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இந்த புகாரை தவிடு பொடியாக்கும் வகையில் முக்குலத்தோர் நிர்வாகிகளுக்கு துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி அளித்தார். இதன் காரணமாக முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகள் சற்றே அமைதியில் இருந்தனர்.

கடுமையான கண்டனம்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முக்குலத்தோர் நிர்வாகிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என விசாரித்த போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி திண்டுக்கல் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாயத்தேவர் மரணமடைந்தார். அதிமுக சார்பில் பல முக்கிய அமைச்சர்கள் வந்திருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை. சென்னையில் திருமண நிகழ்வு உள்ளிட்ட திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருந்ததால் அதனை ரத்து செய்ய முடியாது என்பதால் முக்கிய நிர்வாகிகளை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

புகாரில் உண்மையில்லை
அதே நேரத்தில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாயத்தேவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியின் சாதி அரசியல் வெட்ட வெளிச்சமாக இருப்பதாக கூறும் தென் மண்டல முக்குலத்தோர் சமுதாயத்தினை சேர்ந்த அமைப்பினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். வரும் நாட்களில் தென்மண்டலங்களில் வரும் அவருக்கு தங்களது கடுமையான எதிர்ப்பினை நிச்சயம் பதிவு செய்வோம் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவில் இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இல்லை எனவும் வேண்டுமென்றே சிலர் இதுபோன்ற வன்ம பதிவுகளை முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications