பேபி அணை மரங்கள் வெட்ட தந்த அனுமதியை ரத்து செய்வதா? கேரளாவுக்கு பழ.நெடுமாறன் கடும் எச்சரிக்கை
சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பேபி அணையில் 15 மரங்களை வெட்டும் அனுமதியை திரும்பப் பெற்ற கேரளாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியாறு அணைப் பகுதியில் அமைந்திருக்கும் பேபி அணைக்கு அருகேயுள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்தமைக்காக தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதன்மூலம் பேபி அணையை மேலும் வலுப்படுத்த முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய அனுமதி அளித்தமைக்காக கேரள வனத்துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென கேரள காங்கிரசுக் கட்சித் தலைவரும் மற்றும் சில கட்சிகளின் தலைவர்களும் கண்டன அறிக்கை வெளியிட்டனர். உடனடியாக அந்த அனுமதியை கேரள அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
2006ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் ஆயம் அளித்தத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பில் பின்வருமாறு திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. "பெரியாறு அணையில் நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டைப் போடும் வகையிலேயே நடந்துகொள்கிறது.

பெரியாறு அணையின் பாதுகாப்பு
பெரியாறு அணையை வலுப்படுத்த ஒன்றிய நீர்வள ஆணையம் தெரிவித்த அறிவுரைகளை ஏற்று சில பணிகளை தமிழக அரசு செய்துவிட்டது. மீதமுள்ள பணிகளைச் செய்வதற்குக் கேரள அரசு அனுமதிக்க மறுக்கிறது. அணையின் அனைத்துப் பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன.

அனுமதி
பேபி அணையை பலப்படுத்தப் பணிகளை செய்யவிடாமல் கேரளம் தடுப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. எனவே, பேபி அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதி அளிக்கிறோம். அதற்குக் கேரளம் ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்" எனக் கூறியுள்ளது.

கேரளா அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை
பேபி அணையை வலுப்படுத்தினால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்காகவே கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முற்றிலும் பொய்யான கூக்குரலை எழுப்புகின்றன. இவ்வளவிற்கும் இந்தக் கட்சிகள் அனைத்தும் தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் அகில இந்தியக் கட்சிகளே ஆகும். இந்தப் போக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிர் விளைவையே ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு நெடுமாறன் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications