கொரோனா: மும்பையில் தமிழ் வழியில் படித்த 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல மும்பையிலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவி
சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்த கையோடு, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. இதேபோல பிற மாநிலங்களில் வாழ்கிற தமிழகப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது இதனை ஏற்று மும்பையில் தமிழ் வழியில் படித்த 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மும்பை உள்பட பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்களுக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே நாம் கட்சி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்

இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை போல, தமிழ்வழி பயிலும் மற்ற மாநிலத்திலும், குறிப்பாக மும்பை தாராவி பகுதியில் தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் தேர்வை ரத்து செய்து, தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்பதே அம்மாக்களின் எதிர்ப்பார்ப்பு என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மும்பை வாழ் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு மும்பையிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2019-2020ஆம் கல்வி ஆண்டில் இந்த மையத்தில் தேர்வு எழுத 69 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மும்பையிலும் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத பதிவு செய்திருந்த 69 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றனர். அவர்களுடைய மதிப்பெண்களும் தமிழ்நாட்டில் வழங்கப்படுவதுபோல வழங்க உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications