கூச்சமேயில்லாமல்.. 'ஆரியர்களை' புனிதப்படுத்தி விடலாம் என்ற நினைப்பா.. ஆளுநருக்கு முரசொலி கண்டனம்
ஆளுநர் ரவிக்கு முரசொலி நாளிதழ் கடுமையான கண்டனம் தெரிவித்து கட்டுரை வெளியிட்டுள்ளது
சென்னை: அவதூறு வரலாற்றை ஆளுநர் ரவி, கூச்சமில்லாமல் தொடர்ந்து சொல்லி வருவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது என்றும், ஒரு பட்டமளிப்பு விழாவைக் கூட ஒழுங்காக, முறையாக எப்படி நடத்துவது என்று தெரியாத நிலையில் அது நடந்து முடிந்திருக்கிறது என்றும் முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.
மாநில அரசு அனுப்பி வைக்கும் ஆவணங்கள் மற்றும் மசோதாக்களில் ஆளுநர் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழக அரசு முன்வைத்து வருகிறது. மேலும், ஆளுநர் பல்கலை கழக விவகாரங்களில் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

பொன்முடி
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை மாநில அமைச்சரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஆளுநர் அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது... எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அமைச்சர் பொன்முடியும் அதிரடியாக அறிவித்திருந்தார்... அதேபோல, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக வளாகத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

விந்தியமலை
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசிபோது, "திராவிடம், ஆரியம் என்பது நிலம் சார்ந்த இனப்பிரிவு தான். வரலாற்றை உற்றுநோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துதான், மேற்கில் இருப்பவர்களை ஆரியர்கள், தெற்கில் இருப்பவர்களை திராவிடர்கள், இந்தியாவை மண்டலங்களாக பிரித்து மதம், பொருளாதாரம் காரணமாக ஆங்கிலேயர்கள் பிரித்து ஆண்டனர்" என்றார்.. இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியது... திராவிடம், ஆரியம் தொடர்பாக ஆளுநர் பேசியதற்கு திமுகவின் முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது.

முரசொலி
இது தொடர்பாக முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம் இதுதான்: "ஆளுநர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் அவதூறு வரலாற்றை கூச்சமில்லாமல் தொடர்ந்து சொல்லி வருவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. ஒரு பட்டமளிப்பு விழாவைக் கூட ஒழுங்காக எப்படி நடத்துவது எனத் தெரியாமல் அது நடந்து முடிந்திருக்கிறது. இணை- வேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவை புறக்கணித்திருக்கிறார்.

அமைச்சர் பொன்முடி
நடத்தை விதிமுறைகள் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு. அமைச்சரை கெளரவ விருந்தினராக அழைத்தது மிகத் தவறானது. அதனை சுட்டிக்காட்டியும் திருத்திக்கொள்ளவில்லை. வெளிப்படையாக கண்டித்தும் திருத்திக்கொள்ள முன்வரவில்லை. நாங்கள் செய்வது தான் சட்டம் என்ற போக்கே காரணம். நான் பேசுவதுதான் வரலாறு என்ற அடிப்படையில் ஆளுநர் பேசுகிறார். வேலூர் விழாவில் வாய்க்கு வந்ததை வரலாறாக ஆளுநர் பேசினார்.

டிஆர் பாலு
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அப்போதே விரிவான விளக்கத்தை கொடுத்தார். திராவிடர் என்ற அடையாளம் ஆங்கிலேயர் காலத்துக்கு முந்தியது என்பதை மனு, மகாபாரத உதாரணங்களுடன் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டினார். இதனை உணர்ந்து தனது பேச்சை திரும்ப பெற்றிருக்கவேண்டும். அதை செய்யாமல் அதே கருத்தை மதுரையிலும் சொல்லி இருக்கிறார்.
Recommended Video

பூனைக்குட்டி
இதனை ஏன் பேசிவருகிறார் என்ற பூனைக்குட்டி மதுரையில் வெளியே வந்துவிட்டது. இந்தியாவில் பிரிவினையை விதைத்தவர்கள் ஆரியர்கள் என்பது வரலாற்று அடிச்சுவடிப்பாடம் ஆகும். அதனை மாற்ற முயற்சிக்கிறார் ஆளுநர். அதற்காகத்தான் அவராக வரலாறுகளை திரித்துச் சொல்லிக்கொண்டு வருகிறார். ஆங்கிலேயர்கள்தான் எல்லாப் பிரிவினைக்கும் காரணம் என்று சொல்லி பதியவைத்துவிட்டால், ஆரியர்களை புனிதப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்" என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications