''ரூ.14.37 கோடியை வீணடித்த அதிமுக அரசு''! சி.ஏ.ஜி. அறிக்கையில் புதுத் தகவல்! முரசொலி தலையங்கம்!
சென்னை: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் ரூ.14.37 கோடி வீண் செலவீனம் என சி.ஏ.ஜி.அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அதேபோல் அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.74.03 கோடி பயன்படுத்தவேபட வில்லை என்ற புதிய தகவலும் சி.ஏ.ஜி.அறிக்கையில் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியாகியுள்ள தலையங்கம் வருமாறு;

''காவல் துறையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முக்கியத் துறையான காவல் துறையை நவீனப் படுத்துவதற்கான
திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் ரூ.14.37 கோடி வீண் செலவினமும், இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.74.03
கோடி பயன்படுத்தவே படவில்லை என்பதும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவரின் அறிக்கை வாயிலாகத் தெரிய
வந்துள்ளது.''
''மெகாசிட்டி போலீசிங் (Mega City Policing - MCP) என்பது, காவல்துறை நவீனமயமாக்கலின் ஒரு துணைத் திட்டம் ஆகும். இத்திட்டமானது. தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 60 சதவிகிதம் ஒன்றிய அரசும் 40 சதவிகிதம் மாநில அரசும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.''
''மாநகரங்களிலுள்ள காவல் துறையில் கட்டுப்பாட்டு அறைகளை நவீன மயமாக்குதல். சென்னையில் கண்காணிப்புக் கேமரா நிறுவுதல் ஆகியவற்றைச் செயல்படுத்துவது ஆகும். அதேபோல திருச்சியில் ஏ.பி.சி.ஓ. திட்டத்திற்கான வடிவமைப்பு வழங்குதல், சோதனை செய்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளுதல் உட்பட அடிப்படை உள் கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ''
''இத்தகைய காவல்துறை நவீனமயமாக்கல் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அலைக்கற்றை கட்டணமாகச் செலவிடப்பட்ட ரூ.14.37 கோடி வீண் செலவீனம் ஏற்பட்டுள்ளது.''
''மேலும், சென்னை மற்றும் திருச்சி திட்டங்களின் இலக்குகளை அடைய முடியாமல் போனதுடன் இந்திய அரசு நிதி ரூ. 74.03 கோடியைப் பயன்படுத்த இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. காலதாமதம் மற்றும் நிலவிய சிக்கல்களை அ.தி.மு.க. அரசு தீர்க்கத் தவறியதால் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.''
''சென்னை காவல்துறையில் மாநகருக்காக கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களுக்கான அலைக்கற்றைக் கட்டணங்களுக்காக ஒன்றிய அரசு விடுவித்த 29 கோடியே 49 லட்சத்தில் 14 கோடியே 37 லட்ச ரூபாய் செலவிடப்பட்டதுடன், மீதமான மீதமுள்ள 15 கோடியே 12 லட்சம் ரூபாய் செயல்படுத்தப்படவில்லை.''
''அதேபோல சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நவீன மயமாக்குவதற்கும் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவுவதற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு அரசு 98 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒப்படைப்பு செய்து 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது.''
''இருப்பினும் கொள்முதல் நோக்கத்தில் மாற்றங்கள், புதிய தொழில்நுட்பம் மற்றும் கணிசமான வடிவமைப்பு மாற்றங்கள் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதோடு, கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்ட ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் 58 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கான பயன்பாட்டுச் சான்றிதழானது செலவழிக்கப்படாமலேயே வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.''












Click it and Unblock the Notifications