நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மேல்முறையீடு.. கொடநாடு விவகாரத்தில் வலுக்கும் மர்மம்.. முரசொலியில் தலையங்கம்
சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மரம் வலுக்கிறது என்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்த விசாரணைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் முரசொலியில் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுகவின் முரசொலி நாளிதழில் வெளியான தலையங்கத்தில் கூறுகையில்,
எந்த வழக்கையும் மேற்கொண்டு புலன் விசாரணையை காவல் துறை நடத்தலாம். மேல் புலன் விசாரணை என்பது குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டத்தின் 173 (8) பிரிவின்படி நடத்தப்படுவது. அதன்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல் துறைக்கு உரிமையும் கடமையும் உண்டு. அதன்படிதான் கொடநாடு வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்தப்படுகிறது. மேற்கொண்டு விசாரணை செய்யக் கூடாது என்று எந்த வழக்கிலும் யாரும் சொல்ல முடியாது. அது குற்றவாளிகளைக் காப்பாற்றுவதாக ஆகும். ஆனால் மேற்கொண்டு விசாரணை நடத்தக் கூடாது என்று பழனிச்சாமி சொல்லி வருகிறார். ஜெயக்குமாரை வைத்து சொல்ல வைக்கிறார்.

எண்ணம் பிரதிபலிப்பு
அவரது எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார். அந்த வழக்கு தள்ளுபடி ஆகிறது. உடனே உச்சநீதிமன்றத்துக்கு போயிருக்கிறார்கள். மேல்முறையீடு செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதில் குற்றம் காண விரும்பவில்லை. ஆனால் இந்த வழக்கும், மேல்முறையீடும் மர்மங்களை வலுக்க வைக்கிறதே தவிர, வேறல்ல!

திமுக ஆட்சி
இந்த மர்மங்கள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உருவாக்கப்பட்டவை அல்ல. பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோதுதான் கொடநாடு பங்களாவில் கொலையும் நடந்தது. கொள்ளையும் நடந்தது. இது சம்பந்தமான வழக்குகளைப் பதிவு செய்தது அதிமுக ஆட்சிதான். குற்றவாளிகளைக் கைது செய்ததும் அதிமுக ஆட்சிதான். நான்கு ஆண்டு காலம் அவர்களது ஆட்சியில் தான் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வழக்கு மன்றத்திலும் நடந்தது.

வலுக்கும் மர்மம்
இதில் சம்பந்தப்பட்ட சிலர் அப்போது சொல்ல முடியாத சில தகவல்களை இப்போது சொல்வதற்கு முன் வந்துள்ளார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அன்றைய அதிமுக அரசு உரிய காலத்தில் குற்றப்பத்திரிகையை ஏனோ தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர்களுக்கு எளிமையாக பிணை விடுதலையும் கிடைத்தது. குற்றம்சாட்டப்பட்ட சிலர் இதில் அதிமுகவின் மேலிடத்தில் இருப்பவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என பேட்டி அளித்தார்கள்.

வெளிச்சத்துக்கு வந்தது
பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாகவே குற்றம்சாட்டினார். கொடநாடு சம்பவங்களின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் அவர் சொன்னார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வளவும் அதிமுக ஆட்சியின் போதோ மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

கொலை, கொள்ளை
முன்னாள் முதல்வரின் அடையாளமாக இருந்த வீட்டில் கொலை, கொள்ளை நடந்திருக்கிறது என்பதால் அதில் உள்ள மர்மங்களை திமுக ஆட்சி அமைந்ததும் அது பற்றி விசாரிப்போம் என தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஒருவர் இன்னும் சில விஷயங்கைச் சொல்ல வேண்டும் என நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். அதற்கான அனுமதியை நீதிமன்றம் கொடுத்துள்ளது. அவ்வளவுதான். குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு சட்டம் வழங்கி இருக்கும் தார்மீக உரிமையின் அடிப்படையில் மேற்கொண்டு புலன் விசாரணை நடந்து வருகிறது. இதில் குறை காண்பது, நடந்த குற்றத்தை மறைப்பதற்குச் சமமானது. இதனை அதிமுக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தீர்ப்பில் மிகத் தெளிவு
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல் குமார் அளித்திருக்கும் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது. உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளின்படி குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி எந்த ஒரு கட்டத்திலும் காவல் துறை மீண்டும் புலன் விசாரணையை மேற்கொள்ளலாம். இதில் சந்தேகமோ, எதிர்ப்போ, தவறோ காண முடியாது. இதனால் வழக்கு காலதாமதம் ஆகும் என்று மனுதாரர் சார்பில் வாதம் வைக்கப்பட்டது. ஒரு குற்ற வழக்கின் உண்மையை வெளியில் கொண்டு வருவது தான் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. புலன் விசாரணையில் குறைபாடு இருப்பது தெரியவந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இதில் ஒரே ஒரு நிபந்தனை. விசாரணை நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துவிட்டு விசாரணை செய்ய வேண்டும். கொடநாடு வழக்கில் காவல் துறையினர், விசாரணை நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். நீதிமன்றமும் அதை பதிவு செய்துள்ளது.

நேர்மையான விசாரணை
பெரும்பாலும் விசாரணை முடியும் நிலையில் இருந்தாலும் நேர்மையான விசாரணையின் அடிப்படையில்தான் நியாயமான தீர்ப்புகளை வழங்க முடியும். எனவே இந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை மேற்கொள்வது அவசியமாகிறது. உண்மையை வெளியில் கொண்டு வருவதுதான் முக்கியமாகும். நேர்மையான விசாரணைக்கும் விரைவான விசாரணைக்கும வித்தியாசம் உள்ளது என நீதியரசர் தனது தீர்ப்பில் குறிப்பட்டுள்ளார்கள்.

விசாரணை முறைச் சட்டம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறறவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி மேற்கொண்டு காவல் துறையினர் புலன் விசாரணை செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்ட பிறகும் இந்த விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்திருப்பது மர்மத்தை வலுக்க வைக்கிறது. அம்மாவின் பங்களாவில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மையை ஊருக்குச் சொல்வதற்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என அதிமுக தலைமை அறிவித்தாக வேண்டும். என் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்த முடியாது. நான் அப்பழுக்கற்றவன். எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன் என பழனிச்சாமி அறிவித்தாக வேண்டும். இவற்றைச் செய்யாமல் காவல்துறைக்கு உள்நோக்கம் கற்பிப்பது கண்டிக்கத்தக்கது. இதுவே குற்ற உடந்தை! என முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications