முரசொலி செல்வம் மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ்.. ஸ்டாலின் கையை பிடித்து ஆறுதல்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் மாரடைப்பு காரணமாக இன்று பெங்களூரில் உயிரிழந்தார். இதையடுத்து சென்னை கோபாலபுரம் கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் முரசொலி செல்வம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
முரசொலி செல்வம் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பெங்களூரில் உள்ள எஸ்.ஆர். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முரசொலி செல்வம் உயிரிழந்த செய்தி கேட்டு திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து முரசொலி செல்வம் உடல் சென்னக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு இன்று மாலை கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வந்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாமா முரசொலி செல்வம் உடலை பார்த்து கண் கலங்கினார். அமைச்சர் துரைமுருகனும் அவரது உடலை பார்த்து கதறி அழுதார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் முதல் ஆளாக வந்து முரசொலி செல்வத்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ஓ பன்னீர் செல்வம் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அவரது கையை பிடித்து ஆறுதல் கூறினார்.

அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் முரசொலி செல்வம் உடல் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் வசித்து வந்தார். தமது தாய்மாமாவான கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்து கொண்டார் முரசொலி செல்வம்.

செல்வி - முரசொலி செல்வம் தம்பதியினருக்கு எழிலரசி ஜோதிமணி என்ற மகள் இருக்கிறார். பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் முரசொலி செல்வம். முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் நீண்ட ஆணித்தரமான கட்டுரைகளை முரசொலி செல்வம் தான் எழுதி வந்தார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications