முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்து விசாரணை நடத்த தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்றும், பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்தவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் இல்லை; அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்றும் முரசொலி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலைமை அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் எனக்கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் பாஜகவின் மாநில நிர்வாகி சீனிவாசன் புகார் அளித்திருந்தார்.

Murasoli Trust

இந்த புகார் மீதான விசாரணை தொடர்பாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த நிலம், பஞ்சமி நிலம் அல்ல என 2019 ஆம் ஆண்டு தலைமைச் செயலர் அறிக்கை அளித்துள்ள நிலையில், நிலத்தின் உரிமை குறித்து விசாரிக்க பட்டியலினத்தோர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை" என்று வாதிட்டார்.

மேலும், "புகார் அளித்தவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்; அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல. அரசியல் ரீதியாக முரசொலி அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.

தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, "ஆணையத்துக்கு வந்த புகாரை விசாரிக்க அரசியல் சட்ட அமைப்புக்கு தடை ஏதும் உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், நிலத்தின் உரிமை குறித்து ஆணையம் முடிவெடுக்கப் போவதில்லை. புகார் குறித்து தான் விசாரணை நடத்த உள்ளது" என்றார்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+