‛ஆளுநரை மேடையில் எழுந்து நிற்க கூறிய இளையராஜா’.. சென்னை ஐஐடி வளாகத்தில் பரபரப்பு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா திடீரென்று திரிபுரா ஆளுநர் இந்திர சேனாவை எழுந்து நிற்க கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research சென்டர் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஐஐடி மெட்ராஸ் மற்றும் இளையராஜா தரப்பிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் இசை புதிய ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, ஐஐடி இயக்குநர் காமகோடி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஐஐடி இயக்குநர் காமகோடி, இளையராஜா உள்ளிட்டவர்கள் பேசினர். இளையராஜா பேசுகையில், ‛‛இது எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். இசையைக் கற்றுக்கொள்ள வந்த எனக்கு அப்போது அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார். அன்று கிராமத்தில் இருந்து இசையை கற்றுக் கொள்ள எப்படி இருந்தேனோ. இப்போதும் அதேபோலத் தான் இருக்கிறேன்.
மூச்சு விடுவது போல் எனக்கு இசையும் இயற்கையாக வருகிறது.கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள வந்த நான், இன்று என்னுடைய பெயரில் சென்டர் ஆரம்பித்து இசை கற்றுக் கொடுக்கப் போகிறேன் . இது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்த மையத்தில் இருந்து குறைந்தது 200 இளையராஜா உருவாக வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் பாடல்கள் பாடப்பட்டன. அதற்கு முன்பாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆங்கில மொழியில் தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் பாடப்பட உள்ளதாக அறிவிப்பு செய்தார். இதையடுத்து மேடையில் அமர்ந்திருந்த திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, ஐஐடி இயக்குநர் காமகோடி, இளையராஜா உள்பட அனைவரும் மேடையில் எழுந்து நின்றனர்.
“மூச்சு விடுவது போல.. எனக்கு இசை இயற்கையாக வருகிறது.." சென்னை ஐஐடியில் இளையராஜா பேச்சு
முதலில் தேசியகீதம் பாடி முடிக்கப்பட்டது. இதையடுத்து திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி தனது இருக்கையில் அமர்ந்தார். இந்த சமயத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து இளையராஜா, ஆளுநர் இந்திரசேனாவிடம், தமிழ்த்தாய் வாழ்த்து விபரத்தை கூறி எழுந்து நிற்க கூறினார். உடனடியாக சுதாரித்து கொண்டு ஆளுநர் இந்திரசேனா ரெட்டி தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து ஆளுநர் இந்திரசேனா ரெட்டி இருக்கையில் அமர்ந்தார். ஆனால் அடுத்த நொடியே வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது தானாகவே சுதாரித்து கொண்ட ஆளுநர் இந்திரசேனா ரெட்டி அவராகவே எழுந்து வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை கொடுத்தார். இந்த சம்பவம் மேடையில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications