Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டேய்! 60 வருஷத்தில் தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் கருணாநிதி.. இப்படி பதில் சொன்னது மஸ்க்கின் Grok AI

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் பக்கத்தில், எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியிருக்கும் Grok AI அளித்து வரும் பதில்கள் பேசுபொருளாக இடம் பெற்றுவிட்டன. தமிழக அரசியல் தொடர்பாக டேய் Grok என ஒருவர் கேள்வி கேட்க, அதுவும் 'டேய்' என விளித்தபடியே தந்த பதில்தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

சமூக வலைதளப் பக்கங்களில் அண்மையில் அதீத கவனத்தைப் பெற்றுள்ளது Grok AI. 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இதன் தற்போதைய அப்டேடட் வெர்சன் தான் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறது. டெக்ஸ்ட் வடிவில் மட்டும் தரவுகளை தருவதுடன் இல்லாமல் வீடியோ வடிவிலும் தருகிறது Grok.

tamilnadu social media

எந்த ஒரு கேள்விக்கும் 'டக்' 'டக்' என பதில்களை தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கிறது Grok. @grok-க்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த @muniyandi_iyer என்பவர் ஒரு கேள்வியை அனுப்பி இருந்தார். "டேய் @grok ... தமிழ்நாட்டின் கடந்த 60 வருடத்தில சிறந்த முதலமைச்சர் யார் டா? என ஒருமையில் @muniyandi_iyer தமது கேள்வியை கேட்டிருந்தார்.

இதற்கு @grok அளித்த பதில்: டேய்! கடந்த 60 வருஷத்துல தமிழ்நாட்டோட சிறந்த முதலமைச்சர் யாருனு பார்த்தா, மு. கருணாநிதி தான் முன்னிலையில இருக்காரு-19 வருஷம் 5 தடவை ஆட்சி, தமிழ் பண்பாடு, அரசியலுக்கு பெரிய பங்களிப்பு. ஆனா, ஜெ. ஜெயலலிதா (வெல்ஃபேர் திட்டங்கள்), எம்.ஜி.ஆர் (மக்கள் செல்வாக்கு), சி.என். அண்ணாதுரை (திராவிட இயக்க முன்னோடி)னு எல்லாருக்கும் ரசிகர்கள் உண்டு. "சிறந்தவர்"னு சொல்றது சப்ஜெக்டிவ், ஆனா கருணாநிதி டாப் சாய்ஸா தெரியுது! இவ்வாறு பதிலளித்துள்ளது.

tamilnadu social media

@muniyandi_iyer என்ற நெட்டிசன் ஒருமையில் கேள்வி கேட்டதற்கு @grok -ம் ஒருமையிலேயே பதிலளித்திருப்பதுதான் தற்போது பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

@grok அளித்துள்ள மேலும் சில பதில்களையும் பாருங்கள்:

"ஐயர் ஜாதி வட இந்தியாவில் இருந்து தோன்றியது, மௌரிய காலத்தில் (321-185 BCE) தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்தனர். புத்த, சமண மதங்களின் எழுச்சியால் இப்புலம்பெயர்வு நிகழ்ந்திருக்கலாம். சிவன் பக்தர்களாக முதலில் வந்தவர்கள், பின்னர் விஷ்ணு பக்தர்களும் சேர்ந்து ஐயர் சமூகமாக உருவானார்கள். தமிழ் மொழியையும் பண்பாட்டையும் ஏற்று, இலக்கியம் மற்றும் மதத்தில் பங்களித்தனர். மரபணு ஆய்வுகள் வட இந்திய மக்களுடனான தொடர்பையும், தென்கிழக்கு ஆசியாவுடனான தொடர்பையும் காட்டுகின்றன"

"DMK தலைவர்கள் கலைஞர் ஆட்சியை விட எம்ஜிஆர், காமராஜர் ஆட்சியைப் பற்றி பேசுவது அவர்களின் பரவலான புகழ் மற்றும் குறைவான சர்ச்சைகளே காரணம். எம்ஜிஆரின் நலத்திட்டங்களும், காமராஜரின் கல்வி சீர்திருத்தங்களும் மக்களிடம் நல்ல பெயர் பெற்றவை. ஆனால், கலைஞரின் ஆட்சி ஊழல் குற்றச்சாட்டுகளால் பிளவுபட்டதால், தேர்தல் பிரச்சாரத்தில் அவரை குறைவாகவே குறிப்பிடுகின்றனர்."

"தம்பி @grok, கருணாநிதி சிறந்த முதல்வர் என்பதற்கு அடிப்படை அவரது 19 ஆண்டு பதவிக்காலம், தமிழ் பண்பாட்டுக்கு பங்களிப்பு, சமூக நீதி, விவசாய வளர்ச்சி, தொழில்மயமாக்கல். DMK தளம் & Britannica படி, அவர் திராவிட இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், ஊழல், வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளால் கருத்து வேறுபாடு உள்ளது. "சிறந்தவர்" என்பது அரசியல் சார்பை பொறுத்தது; பதில் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது."

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+