சிஎம் சார்.. ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட "குறவன், குறத்தி".. பூரித்த அப்துல் கலாம்.. பெருகிய நெகிழ்ச்சி

முதல்வர் ஸ்டாலினை சிறுவன் அப்துல் கலாம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனையோ பரபரப்புகளுக்கு இடையேயும், சிறுவர், சிறுவர்களின் மீதான அக்கறையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. அந்த வகையில், இன்றைய நாள் 2 முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.

சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் அப்துல் கலாம். 7-ம் வகுப்பு படிக்கிறான்.. ஒரு சேனலுக்கு அளித்த ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டான்...

"வாழ்வில் உங்களுக்கு பிடிக்காத நபர் என்றால் அது யார்" என்ற பொதுப்படையாக கேட்கப்பட, எல்லாரும் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்ல்லி கொண்டே வந்தனர்..

 பள்ளி மாணவன்

பள்ளி மாணவன்

ஆனால் சிறுவன் அப்துல், யாரையும் புடிக்காதுன்னு முதல்ல சொல்லாதிங்க, என்னையும் எல்லாரும் பல்லன்னு தான் கூப்டுவாங்க... நான் ஏன் எல்லாரையும் புடிக்காதுன்னு சொல்லனும்?.. எல்லாரும் நண்பர்கள் மாறி தான். ஒற்றுமை இல்லாத நாடு எதுக்கு இருக்கனும்.. நம்ம நாடு ஒற்றுமையான நாடுனு சொல்றோம், ஒற்றுமை இல்லாம இருந்தா எப்படி? என்று கேட்டு திணறடித்து விட்டான்.

 ஹிஜாப்

ஹிஜாப்

இதற்கு பிறகு வேறு ஒரு பேட்டியில், ஹிஜாப் பிரச்சினையை குறித்து அப்துல்லிடம் கேட்டனர்.. அதற்கு அவன், சாதி மத கலவரம் நமக்கு எதுக்கு.. அதெல்லாம் இங்கே தேவையில்லை.. எல்லாருமே இந்தியர்கள்.. எல்லாரும் ஒரே மாதிரிதான்.. எல்லாருக்கும் ரத்தம் கலரு ஒன்னுதான்.. நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் சாதி மதம்ன்னு சொல்லி தந்துட்டாங்க.. அதனாலதான் சாதி பத்தி இப்போ வரைக்கும் பேசிட்டு இருக்கோம் " என்று பெரியவர்களே திக்குமுக்காடி போகும் அளவுக்கு பதில் தந்தான்.

 பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

சிறுவனின் வீடியோவும், அந்த பேச்சும் சோஷியல் மீடியாவில் வைரலானது.. பொதுமக்களோ, இதை கேட்டும் பார்த்தும் வாயடைத்து போனார்கள்.. மனம் திறந்து அப்துல்லை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை, சிறுவன் அப்துல் கலாமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளான். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தந்தை பெரியார் நாடகத்தில் சிறுவர் சிறுமியர்கள் நடித்திருந்தனர்..

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இது மக்களின் ஏகோபித்த ஆதரவையும், பாராட்டையும் பெற்றிருந்த நிலையில், இதில் நடித்திருந்த சிறுவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.. அதுகுறித்து முதல்வர் ஸ்டாலினே ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

 வாழ்த்து

வாழ்த்து

அதுபோலவே, சிறுவன் அப்துல் கலாமும் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளான்.. "இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாம், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்' என்று ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது.

 ஸ்டாலின் சார்..

ஸ்டாலின் சார்..

இதை பார்த்த ட்விட்டர்வாசிகளின் முதல்வரின் ட்வீட்டுக்கு சென்று, அப்துல் கலாம்குறித்த பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.. "அவர்கள் வாழ்ந்த வாடகை வீட்டிலிருந்து வெளியேற சொல்லி விட்டார்கள் அய்யா.. அவர்களுக்கு ஏதேனும் வீட்டு வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும், முதல்வர் அய்யா, சமூக அக்கறை கொண்ட இது போன்ற குழந்தைகளுக்கு தலைவர் கலைஞர அல்லது பெரியார் பெயரால் விருது கொடுங்க சார்" என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.. மேலும் சிலர், இனிமேல் அப்துலை யாராவது வீடு காலி பண்ண சொல்லுவாங்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+