“இதுதான் தமிழ்நாடு”! மதுரை மீனாட்சி கோயில் ஊர்வலத்தில் கேபிள் ஒயரை அப்புறப்படுத்திய இஸ்லாமிய பெண்மணி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சப்பர ஊர்வலம் வரும் போது, தெற்கு வெளி வீதியில் தாழ்வாக தொங்கிக் கிடந்த கேபிள் ஒயரை அகற்றிய இஸ்லாமியப் பெண்மணி. துண்டிக்கப்பட்ட கேபிள் ஒயர் பக்தர்களின் காலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரே அதனை அப்புறப்படுத்தினார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா இன்று நடைபெற்று வருகிறது. சாரல் மழைக்கு மத்தியிலும் ஆயிரணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் லீலையை குறிக்கும் வகையில் நடைபெறும் அஷ்டமி சப்பர விழா பிரசித்தி பெற்றது.

கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனி தனி சப்பரங்களில் எழுந்தருளினர். உலகாளும் ஈசன் உலகிற்கு படி அளக்கும் லீலையை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழாவில், வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
இந்த அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடத்தினை பிடித்து இழுத்துச் செல்வது தனிச்சிறப்பு. நான்கு வெளி வீதிகளிலும் சப்பரத்தில் வலம் வந்த சுவாமி அம்மனை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சப்பர ஊர்வலம் வரும் போது, தெற்கு வெளி வீதியில் தாழ்வாக தொங்கிக் கிடந்த கேபிள் ஒயரை இஸ்லாமியப் பெண்மணி ஒருவர் அகற்றியுள்ளார். துண்டிக்கப்பட்ட கேபிள் ஒயர் பக்தர்களின் காலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரே எடுத்து அதனை அப்புறப்படுத்தினார். இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு, "இதுதான் தமிழ்நாடு" எனத் தெரிவித்து வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications