"எதிர்கால தலைமுறை வளர்ச்சிக்கு கலையின் பங்கு முக்கியம்".. முத்தமிழ் பேரவை விருது விழாவில் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் முத்தமிழ்ப் பேரவையின் விருது வழங்கும் விழாவில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை தவறவிடாமல் தொடர்ந்து வருகிறேன். நடிகர் நாசர் கூறியதைப்போல முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக அடுத்த ஆண்டும் வருவேன் என்று கூறியுள்ளார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா நடைபெற்றது. இதில், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறந்த கலைஞர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். நடிகர், கதாசிரியர், பாடலாசிரியர் என திரையுலகில் கோலோச்சி வந்த நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நாதஸ்வர கலைஞர் வடுவூர் எஸ்.என்.ஆர்.மூர்த்தி, நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற புலவர் சண்முக வடிவேலன், கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வெங்கடராமன், நடனக் கலைஞர் அனிதா உள்ளிட்டோருக்கு மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை தவறவிடாமல் தொடர்ந்து வருகிறேன். நடிகர் நாசர் கூறியதைபோல முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக அடுத்த ஆண்டும் வருவேன். விழாவின் இயக்குநர் அமிர்தம் அழைத்தால், நான் மறுக்க முடியுமா?.
சிறுவயதில் இருந்து என் வளர்ச்சியை பார்த்தவர். என்னை வளர்த்தவர்களில் முக்கியமான ஒருவர் அமிர்தம்.
தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டிருக்கும் முத்தமிழ் பேரவையின் 51வது ஆண்டுவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். கலைகளை, கலைஞர்களை மதித்த காரணத்தால், கருணாநிதி கலைஞராக விளங்கினார். அவர்பேரில் விருது வழங்கவேண்டுமென்று நான் வைத்த கோரிக்கையின் படி கடந்த ஆண்டு சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
நாசருக்கு கலைஞர் விருது
இந்த ஆண்டு நாசருக்கு கலைஞர் விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியின் எழுத்தில் இளைஞன், பாசப்பறவை, பொன்னன் சங்கர் என பல படங்களில் நடித்தவர் நாசர். அவர் இன்று கலைஞர் விருதை பெறுவது மிக மிக பொருத்தம் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அவருக்கு எல்லாம் தகுதியும் உள்ளது. கலைஞரின் பராசக்தி வசனம் பேசித்தான் வாய்ப்பு பெற்றேன் என நாசர் பல இடங்களில் பேசியுள்ளார். நன்றி மறக்காத மனிதராக நாசர் இருக்கிறார்.
சினிமாவில் ஓய்வின்றி இயங்கியபோதும் கலைஞர் கேட்டுக்கொண்டதால், சின்ன திரை தொடரில் நடித்துக்கொடுத்தார். நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற புலவர் சண்முக வடிவேலின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு தூங்கிய இரவுகள் உண்டு. அவர் இயல் செல்வம் விருது பெற்றது மிகுந்த பொருத்தமானது.
வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்
இசையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் காயத்ரி வெங்கட்ராமன். நாட்டிய செல்வம் விருது பெற்றுள்ள அனிதா, சென்னையில் மிகப் பிரபலமான நாட்டிய ஆசிரியை. டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் தந்தையும் இசைக்கலைஞர்தான். ஆனால், குருவை மிஞ்சும் சிஷியர்களாக இவர்கள் உள்ளனர். விருது பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
இனி எதிர்காலத்தில் நீங்கள் எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் பெறலாம். ஆனால், அரை நூற்றாண்டு காலமாக இயங்கக் கூடிய அமைப்பு அளித்துள்ள பட்டம் என்பதால் இது கூடுதல் சிறப்பானது. உங்கள் கலைப்பணி தொடர்ந்து சிறப்பாக தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். முந்தைய ஆட்சிகாலத்தில் 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளையும், சின்னத்திரை விருதுகளையும் நாம் ஆட்சிக்கு வந்தபின் 2022ஆம் தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. அதுபோல தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன விருதுகளும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
கலையின் பங்கு முக்கியமானது
வசனகர்த்தா ஆருர்தாஸ், கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது. டி.எம். சௌந்தராஜன் நூற்றாண்டு விழாவை கொண்டாடி உள்ளோம். எஸ்.பி.பி, விவேக், ஜெய்சங்கர் ஆகியோர் பெயரில் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தியுள்ளோம். கலைமாமணி விருதுகள் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. நடிகர் சிவக்குமாருக்கு மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு கலைஞர்களை போற்றக்கூடிய அரசாக திமுக உள்ளது. எதிர்கால தலைமுறை வளர்ச்சிக்கு, கலையின் பங்கு முக்கியமானது'' என்று கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications