Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

400 பவுன் நகைகள், ஒருகோடி ரூபாய் மோசடி.. பிடிபட்ட முத்தூட் பைனான்ஸ் ஊழியர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் முத்தூட் பைனான்ஸ் நிறுவன கிளையில் 400 பவுனுக்கு அதிகமாக மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்துக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் இருக்கிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலும் முத்தூட் நிறுவனத்துக்கு சொந்தமான‌ கிளை ஒன்று இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு கடனுக்கான வட்டியை செலுத்துமாறு நோட்டீஸ் வந்தது. அதில், வாடிக்கையாளர்கள் அடகுவைத்த அளவைவிட அதிகமான நகை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, நோட்டீஸ் கிடைக்கப்பெற்றவர்கள், முத்தூட் நிறுவனத்துக்கு சென்று விசாரித்தார்கள்.

 விசாரணை

விசாரணை

ஆனால், நிறுவனத்தினர் சரியான பதிலை சொல்லாததால், அடகு வைத்தவர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து முத்தூட் நிறுவன தலைமையகத்துக்கு இது தொடர்பாக புகார் போனது. இதையடுத்து, விசாரணை நடந்தது. விசாரித்ததில் அந்த கிளையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. அங்கு பணியாற்றிய ஊழியர்களே போலியான ஆவணங்கள் உருவாக்கி பணம் கையாடல் செய்திருக்கிறார்கள். அதோடு, தங்க நகைகளை மாற்றி போலியான நகைகளை வைத்து மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

 மோசடி

மோசடி

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் மட்டும் க‌டந்த 6 மாதங்களில் எண்பதுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் கைவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 380 சவரன் தங்க நகைகளை எடுத்து அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்தது தெரியவந்துள்ளது. இதில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை கையாடல் செய்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

புகார்

புகார்

இதையடுத்து நிறுவன மேலாளர் ரவி போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மஞ்சூர் கிளை நிறுவனத்தில் பணிபுறியும் கணக்காளர் நந்தினி‌, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர் போலீஸார்.

 விசாரணை

விசாரணை

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடந்தது. மஞ்சூர் கிளையின் மேலாளராக பணியாற்றி வரும் சாந்திபிரியா, நகை மதிப்பீட்டாளர்‌ ராஜீ, கேஷியர் நந்தினி மற்றும்‌ கம்ப்யூட்டர்‌ ஆப்ரேட்டர்‌ விஜயகுமார்‌ ஆகிய நால்வரும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரையிலான காலகட்டத்தில்‌ அந்த நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 81 வாடிக்கையாளர்களின்‌ நகைகளை மாற்றியது தெரியவந்தது.

 போலி ஆவணம்

போலி ஆவணம்

இந்த நால்வரும் இணைந்து, போலியாண ஆவணங்களைப் பயன்படுத்தி, புதிய போலியான ஆவணங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அதில், அவர்களின் கையெழுத்தைப்போட்டு, அடகு வைத்ததைப் போல பணத்தை எடுத்து கையாடல் செய்துள்ளனர். புகார் கூறப்பட்ட நால்வர் மீதும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததும், குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்தனர். இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தலைமறைவாக இருக்கும் மேலாளர் சாந்திபிரியா மற்றும் நகை மதிப்பீட்டாளர் ராஜூ ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். நீலகிரியில் 400 பவுன் தங்கத்தில் ஒரு கோடிரூபாய் அளவுக்கு முத்தூட் நிறுவன ஊழியர்கள் மோசடி செய்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+