காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவில் 5 மணி நேரம் மின்சாரம் தூண்டிப்பால் ஆத்திரமடைந்த முட்டுக்காடு பகுதி மக்கள் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. கடுமையான போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பேசுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டிய நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தையால் 5 மணி நேரம் கழித்து நள்ளிரவு 1 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் மின் தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ஈசிஆர் சாலை முட்டுக்காடு பகுதியில் இரவு 8 மணி முதல் மின்சாரம் தூண்டிக்கப்பட்டது.

Muttukadu ECR Power Cut

சுமார் 3 மணி நேரமாக மின்சாரம் வராததால் கொசுக்கடியில் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது மின்வாரிய அதிகாரிகள் இது எங்களுடைய பிரச்சனை இல்லை என்று அலட்சியமாக கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முட்டுக்காடு பகுதி மக்கள் இரவு 11 மணியளவில் ஈசிஆர் சாலையில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈசிஆர் சாலையின் இருப்புறத்திலும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் அமர்ந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரி - சென்னை பிரதான சாலையிலும், சென்னை புதுச்சேரி பிரதான சாலையிலும் வாகனங்கள் வெகு தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.

இதனால் வாகன ஓட்டிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் கடுமையாக அவதிப்பட்டனர். சுமார் 2 மணி நேரமாக ஈசிஆர் சாலையில் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நாள்தோறும் இதே நிலை முட்டுக்காடு பகுதியில் நீடிப்பதாகவும், குழந்தைகள், பள்ளி சிறுவர்கள், கர்பிணி பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும், மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினால் மிகவும் அலட்சியமாக பேசி வருவதாகவும் அப்பகுதி மக்கள் காவதுறையிடம் குற்றம்சாட்டினர்.

தகவல் அறிந்த திருப்போரூர் தவெக எம்எல்ஏ விஜயராஜ் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். காவல்துறை அதிகாரிகள் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று உடனடியாக முட்டுக்காடு பகுதியில் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுத்தால் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். முட்டுக்காடு பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததால் திடீரென ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு நிலவியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+