நான்தான் ஜெயலலிதாவின் மகள்.. அப்பல்லோவில் பின்வழியாக சந்தித்தேன்.. குண்டை தூக்கி போடும் பெண்
சென்னை: நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்பதை நேரம் வரும் போது நிரூபிப்பேன் என மைசூரை சேர்ந்த பெண் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Recommended Video
ஏற்கெனவே ஜெயலலிதாவின் மகள் என கூறி இரு வேறு பெண்களின் பெயர்களும், மகன் என கூறி ஒரு ஆணின் பெயரும் அடிபட்ட நிலையில் தற்போது புதிதாக ஒரு பெண் தான்தான் ஜெயலலிதாவின் மகள் என சொந்தம் கொண்டாடியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் கழித்து காலமானார்.

அதிமுகவில் நிறைய மாற்றங்கள்
இவரது மறைவுக்கு பின்னர் அதிமுகவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜெயலலிதாவின் மகன் என்றும் மகள் என்றும் கூறி கொண்டு இருவர் அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்து அது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மைசூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தான்தான் ஜெயலலிதாவின் மகள் என கூறி புதியதொரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பிரேமா பேட்டி
சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பெண் ஒருவர் அஞ்சலி செலுத்தினார். அப்போது மறைந்த ஜெயலலிதாவின் மகள் நான்தான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து பிரேமா செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், நான் மைசூரில் இருந்தேன்.

வளர்த்த பெற்றோர்
சென்னை பல்லாவரத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் இங்கு வரக் கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால் அம்மாவின்நினைவு அதிகமாக வந்தது. அதனால் தீபாவளி அன்று அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கலாம் என வந்தேன். பார்வை நேரம் முடிந்து விட்டதால் அடுத்த நாள் வந்து அஞ்சலி செலுத்தினேன். என்னை வளர்த்த பெற்றோர் உயிரிழந்துவிட்டனர்.

ஜெயலலிதாவின் மகள்
என்னை என் அம்மா ஜெயலலிதா பேபி என செல்லமாக அழைப்பார். நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை ஆதாரப்பூர்வமாக உரிய நேரத்தில் நிரூபிப்பேன். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நான் பின்வாசல் வழியாக சென்று அவரை சந்தித்தேன். ஜெயலலிதாவின் உதவியாளர் முத்துசாமி என்னை அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு அம்மா முத்தம் கொடுத்தார். போயஸ் கார்டன் இல்லத்திலும் அம்மாவை ஒரு முறை சந்தித்துள்ளேன் என பிரேமா கூறியது பெரும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications