சென்னையில் மர்ம காய்ச்சல்.. குழந்தைகள் இடையே வேகமாக பரவல்.. கண்களிலும் பாதிப்பு.. அதிகரித்த கேஸ்கள்
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைகள் நாள்தோறும் 85 முதல் 100 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை: இந்தியா முழுவதுமே காய்ச்சல் சீசன் வேகம் எடுத்திருக்கும் நிலையில், சென்னையில் ஒருவித மர்மக் காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. இது அனைத்து தரப்பினரையும் தாக்கும் என்ற போதிலும், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படடுகிறது. இந்த மர்மக் காய்ச்சலால் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் திடீரென கடந்த சில தினங்களாக பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே காணப்பட்டு வந்த இந்த காய்ச்சல், பிறகு பல்வேறு மாநிலங்களில் பரவியிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கானோர் அடுத்தடுத்து இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தட்பவெப்பம் மாறுபாட்டால் காய்ச்சல் வருவது இயல்புதான் என்றாலும், அது ஒரே மாதிரியான பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்படக்கூடிய காய்ச்சலாக இருக்கும். ஆனால், இப்போதோ பல வகையான காய்ச்சல்கள் பரவி வருவதால் மருத்துவர்களே குழப்பம் அடைந்துள்ளனர்.

ஃப்ளூ காய்ச்சல்
அந்த வகையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 'இன்ஃப்ளூயன்ஸா A H3N2' எனப்படும் வைரஸால் ஏற்படும் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. மற்ற ஃப்ளூ காய்ச்சல் வைரஸ்களை காட்டிலும் 'இன்ஃப்ளூயன்ஸா A H3N2' வைரஸ் மிகவும் வீரியமானது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பொதுவாக, இந்த வகை வைரஸ் தாக்கினால் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு அதிதீவிர காய்ச்சலும், தொடர் இருமலும் சளியும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், காய்ச்சல் விட்ட பிறகும் அதன் அறிகுறிகளான இருமல், சளி, உடல்வலி ஆகியவை 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மர்மக்காய்ச்சல்
அந்த வகையில், தற்போது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மர்மக்காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. கடுமையான உடல் வலி, வறட்டு இருமல், நெஞ்சு சளி ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. மேலும், குழந்தைகள் இந்த வகை காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, கண்வீக்கம், கண் வலி ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் சென்னையில் சாதாரண கிளினிக் முதல் பெரிய மருத்துவமனைகள் வரை நோயாளிகளால் நிரம்பி வழிந்து வருகின்றன.

குழந்தைகளை காப்பது எப்படி?
குறிப்பாக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைகள் நாள்தோறும் 85 முதல் 100 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் குறைந்தபட்சம் 20 குழந்தைகளை உள்நோயாளிகளாக சேர்க்கும் அளவுக்கு பாதிப்படைந்த நிலையில் வருகிறார்கள். இவ்வாறு உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சல் குறைய 5 நாட்கள் ஆவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், பல வகையான காய்ச்சல் பரவி வருவதால் குழந்தைகளை பொது இடங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும்" எனக் கூறினர்.

டைபாய்டு, மூளைக்காய்ச்சல்..
இந்நிலையில், ஃப்ளூ காய்ச்சல், மர்மக்காய்ச்சல் மட்டுமல்லாமல் டைபாய்டு, டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல், மூளைக்காய்ச்சல் ஆகியவையும் தமிழகத்தில் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வீட்டுக்குள் கொசு வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் எனக் கூறப்படுகிறது. மேலும், பல வகையான காய்ச்சல்கள் பரவி வருவதால் ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும், எந்தக் காய்ச்சல் ஏற்பட்டாலும் சுயமாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை சாப்பிடக் கூடாது என்றும், மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications