"எவன் வர்றான் பார்ப்போம்".. டெல்லி வரை பறந்த புகார்.. கொந்தளிக்கும் பாஜக.. கையை பிசையும் திமுக.. ஏன்
கரூர் சுவர் விளம்பரங்களில் கரி பூரிய மர்மநபர்கள் யார் என்று தெரியவில்லை
சென்னை: யார் இந்த வேலையை பார்த்தது என்று தெரியவில்லை.. திமுக மீது டெல்லி வரை புகார் பறந்துள்ள நிலையில், புதிய பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.
கரூர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பிருக்கும் சுவர்களில் நிறைய விளம்பரங்கள் இடம்பெறுவது வழக்கம்.
குறிப்பாக, அரசியல் கட்சியினர் தேர்தல் சமயங்களில் இந்த சுவர் விளம்பரங்களில் கவனம் செலுத்துவார்கள்.. அந்த வகையில், திமுகவினர் தற்போது சுவர் விளம்பரம் செய்திருக்கிறார்கள்..

செந்தில் பாலாஜி
இதே மாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி, பெரும்பாலும், கரூர் வந்தால் இந்த கோட்டாட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள கரூர் கெஸ்ட் ஹவுசில் தங்குவதுதான் வழக்கம்.. அங்கிருந்துதான், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார். இந்த கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்புதான்,, பயணியர் மாளிகையும் உள்ளது.. அதனால், எதிரில் உள்ள சுவர் விளம்பரங்களை செந்தில்பாலாஜி கவனிக்கவே செய்வார்..

காம்பவுண்டு சுவர்
இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.. இங்கு, திமுகவினர் சுவர் விளம்பரம் செய்யாத, ஒரு பகுதியில் பிரதமர் மோடியின் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.. அதாவது பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17-ம் தேதி அன்று பிறந்தநாள் ஆகும்.. இதை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் விளம்பரங்கள் இந்த சுவர்களில் செய்யப்பட்டிருந்தது.. "கோட்டாட்சியர் அலுவலக காம்பவுண்டு சுவரில், நாங்கள்தான் விளம்பரம் செய்வோம்" என்று திமுக தரப்பினர் பாஜகவினரிடம் சொல்லி உள்ளதாக தெரிகிறது..

கைகலப்பு
இது தொடர்பாக மாவட்ட பாஜக - திமுகவினர் இடையே 2 நாட்களுக்கு முன்பு வாக்குவாதங்களும் நடந்துள்ளன.. அது கைகலப்பு வரை வந்திருக்கிறது. இந்த விஷயம் கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் அமைதியாகச் செல்லும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

மைதானம்
இந்நிலையில்தான், திருவள்ளூர் மைதானம் முன்பு, தனியார் சுற்றுச்சுவரில் பாஜக செய்யப்பட்டிருந்த விளம்பரத்தின்மீது யாரோ கருப்பு மை பூசியிருக்கிறார்கள்.. அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி, மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் போன்றோரின் போட்டோக்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவைகளின் மீதுதான் மர்மநபர்கள் கருப்பு மை அப்பிவிட்டு சென்றுள்ளனர். பூசியுள்ளனர்.

செந்தில்நாதன்
இது பாஜகவினருக்கு கடுமையான அதிர்ச்சியை தந்து வருகிறது.. போலீசாரின் தூண்டுதலின் பேரிலேயே, திமுகவினர் சுவர் விளம்பரங்கள் மீது கருப்பு மை பூசியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன... எனவே, திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று பாஜகவினர் புகார் அளித்தனர்.

எவன் வர்றான் பார்ப்போம்
அதுமட்டுமல்ல, சுவர் விளம்பரங்களில் மர்மநபர்கள் இப்படி செய்திருப்பது சிசிடிவியில் பதிவாகி இருக்கின்றன. இந்த சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன... சுவர் விளம்பரங்களை அழிக்கும்போது, "எவன் வர்றான் பார்ப்போம்" என்று 2 பேர் கையில் தடியுடன் நிற்கிறார்கள்... இந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.

செந்தூரபாண்டியன்
இதனிடையே, இன்னொரு தகவலும் வெடித்து கிளம்பி உள்ளது.. அம்பேத்கர் 132-வது ஜெயந்தி விழாவின் போது கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூரபாண்டியன், பட்டியல் அணி நிர்வாகிகள் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் வி.வி.செந்தில்நாதன் புகார் அளித்துள்ளாராம்.. அந்த புகார் மீது விளக்கம் கேட்டு கரூர் மாவட்ட போலீசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆக, மொத்தம் கரூர் சம்பவம் டெல்லி வரை பறந்துள்ளது.. இது திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications