தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் விருது...முதல்வர் நேரில் சென்று வழங்கினார்
சென்னை : தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் தியாகி சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கினார்.
தமிழ் நாட்டிற்கும் தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்கள் பெருமைப்படுத்தும் விதமாக தகைசால் தமிழர் விருது வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்வர் கைகளால் இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழ் 10 லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது தமிழக அரசின் இந்த விருதை பெறும் முதல் ஆளுமையாக சுதந்திர போராட்ட தியாகி மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என் சங்கரய்யா தகைசால் தமிழர் விருதை பெற்றார்

இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மாணவர் தலைவராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணி ஆற்றியதுடன் தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கர யாவை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டடின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது
கொரனோ பரவல் முன்னெச்சரிக்கை வயது மூப்பின் காரணமாக சங்கரய்யா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே வசித்து வருகிறார் வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை இதன் காரணமாக கௌரவப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக வந்து முதல் தகைசால் தமிழர் விருதை சங்கரய்யாவிற்கு வழங்கி பாராட்டுச் சான்றிதழ் 10 லட்சத்துக்கான காசோலையை ஆகியவற்றை வழங்கினார்
தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சங்கரய்யா தமிழக முதலமைச்சரின் கொரனோ நிவாரண நிதிக்கு தனக்கு அளிக்கப்பட்ட நிதியை வழங்கினார்
திமுக பொருளாளர் டி ஆர் பாலு அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி தா.மோ அன்பரசன் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ கருணாநிதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் டி கே ரங்கராஜன்
உடனிருந்தனர்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications