விஜயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை! பல்லடத்தில் சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு- ஹாஸ்பிடலில் அனுமதி
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் உடநலக் குறைவால் பல்லடம் அருகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சீமான் மீதான புகார் குறித்து சென்னையில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது திருமண மோசடி புகார் கொடுத்திருந்தார். அதில் 2008-ம் ஆண்டு சீமானுக்கும் தமக்கும் மதுரையில் திருமணம் நடந்த்து தொடங்கி சீமான் ஏமாற்றியது எப்படி என்பது வரை விரிவாக விவரித்திருந்தார் விஜயலட்சுமி.

சீமான் மீது ஏற்கனவே விஜயலட்சுமி போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து பெங்களூர் சென்று அங்கிருந்தபடியே சீமான் மீது பல்வேறு புகார்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி.
இந்நிலையில்தான் திடீரென சென்னை வந்த விஜயலட்சுமி, போலீசில் சீமான் மீது புகார் கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு விஜயலட்சுமி வரவழைக்கப்பட்டார். அவரிடம் கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள் விசாரணை நடத்தினார்.
இதனிடையே கோவை பல்லடம் அருகே போராட்டம் ஒன்றில் பங்கேற்பதாக சீமான் அறிவித்திருந்தார். அப்போராட்டத்துக்கு செல்வதற்கு முன்பாக சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சீமான் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்ற போது அதே இடத்தில் சீமான் அப்படியே மயங்கி சரிந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications