Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதவி செஞ்சது குத்தமா.. திமுக எம்பி செந்தில்குமாரை சோதித்த நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விபத்தில் சிக்கிய தனது நண்பரின் சிகிச்சைக்காக நிதி திரட்டி உதவி செய்த திமுக எம்பி செந்தில் குமாரை சோதிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிலளித்து இருக்கிறார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் எக்ஸ் தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "விபத்தில் சிக்குண்ட இளைஞர் மீண்டுவர உதவுங்கள்! மறுவாழ்வு கொடுங்கள்! இவர் பெயர் ஐயப்பன். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்தவர். என்னோடு ஒரே கல்லூரியில் படித்தவர். சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் விபத்தில் சிக்குண்டு, காலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். அம்மாவும், அப்பாவும் இறந்துவிட்டதால் அண்ணனின் அரவணைப்பில்தான் தற்போது இருக்கிறார்.

 Naam Tamilar Party Idumbavanam Karthik replied DMK MP Senthil Kumar

கையிலிருந்த கொஞ்ச நஞ்ச பணம், கடன் வாங்கியதென இலட்சக்கணக்கில் செலவு செய்தாகிவிட்டது. இன்னும் சிகிச்சை மீதமிருக்கிறது. அதற்கான நிதியாதாரம் இல்லாததால் செய்வதறியாது தவித்து வருகிறார். "என் கால் மட்டும் சரியாகிவிட்டால் போதும். என்னை நான் பாத்துக்குவேன். அதை சரி பண்ணிவிட்டா போதும்" என உதவிக் கோருகிறார். அவருடைய அலைபேசி எண்: 6382974470

Name - Iyappanarchunan,
AC No - 3261101012904
IFSC Code - CNRB0003261
Gpay no - 6382974470

நிதியுதவியோ, சிகிச்சையாகச் செய்துகொடுத்தோ அவர் மீண்டுவர உதவுங்கள்! காயம்பட்டு நிற்கும் இளைஞனுக்கு மறுவாழ்வு கொடுங்கள்!
முடிந்தளவு செய்தியைப் பகிருங்கள்!" என்று குறிப்பிட்டு இருந்தார். -

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இதை ரீட்வீட் செய்த திமுக எம்பி செந்தில்குமார், "அவரை தொடர்பு கொண்டு பேசியதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளர். ஏற்கனவே சிகிச்சை எடுத்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து நிலையில் சிகிச்சைக்கு தேவையான பண உதவி செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் தளத்தில் திமுக எம்பி செந்தில் குமார் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "தோழர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் தோழர் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யும் எண்ணத்தில் 200 டிவிட்டர் நண்பர்கள் தலா ரூ.500 என 1 லட்சம் #targeted_crowd_funding மூலம் உதவ நினைக்கும் நண்பர்கள் #medicalhelp Hashtag அல்லது எனக்கு தனியாக மெசேஜ் அனுப்பினால் அவரது வங்கி கணக்கு அனுப்புகிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக அவருக்கு உதவிகள் குவிந்தன. உதவிய 201 நபர்களின் பெயரை தொடர்ந்து செந்தில் குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வந்தார். இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த இடும்பாவனம் கார்த்திக், "விபத்தில் சிக்குண்ட ஐயப்பன் எனது நண்பரது நண்பர்; எனது கல்லூரித்தோழர். அவரது மருத்துவத்திற்கு உதவ நிதிதிரட்டல் செய்த தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியும், அன்பும்! மற்றபடி, அரசியல் சண்டை எப்போதும் போல தொடரும்!" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்த செந்தில் குமார், "நன்றி. சண்டை செய்ய நான் தயார் இல்லை. மனிதம் மலரட்டும்." என குறிப்பிடவே அதை ரீட்வீட் செய்த கார்த்திக், "அரசியல் சண்டைனா அடிதடினு நெனைக்குற அளவுக்கு பச்சைப்புள்ளையா இருக்கீங்களே மருத்துவரே! நன்றி மருத்துவரே! அதே மனிதம் மீண்டுமொரு முறை மலரட்டும்!" என்று குறிப்பிட்டு வடிவேலு படத்தை நகைச்சுவையாக வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் இடும்பாவனம் கார்த்திக்கை விமர்சித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+